பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் படுத்தும் பாடு! 35 மணலில் உட்க்ார்ந்து அதனைச் சரியாக அவள் ஒழுங்குபடுத்திக் கொள்ளுகின்ருள். சுழியே, நான் பாண்டியனைக் கூடுவது உறுதி யானுல் நீ கூடு' என்று சொல்லிக்கொண்டே சுழிக்கத்தொடங்கு கின்ருள். சுழித்துக்கொண்டே இருப்பவள் திடீரென்று சுழிப்பதை கிறுத்திவிடுகின்ருள். ஒருவேளை சுழி வட்டங்கள் சரியாகப் பொருந்தாவிட்டால் பாண்டியன் வரமாட்டானே என்ற எண்ணம் அவளிடம் எழுகின்றது. இந்த மயக்க உணர்வு அவள் சுழிப்பதைத் தடுத்து நிறுத்துகின்றது. பரப்பிய மணலில் கையை வைத்துக் கொண்டு மயங்கிய நிலையிலிருக்கும் அவளை அவளுடைய உயிர்த் தோழி காண்கின்ருள். தோழி தன் செயலை ஒருபால் மறைந்துகின்று பார்ப்பதைக்கூட அவள் காண வில் லே ; அவ்வளவு மயக்கம் அவளுக்கு தோழி அவள் கிலைக்கு இரங்குகின்ருள். தலைவியின் கிலேயைத் தோழியின் நினைவாகக் கவிஞர் நமக்குத் தன் கவிதையின்மூலம் காட்டுகின்ருர். அவரது கவிதை இது : கூடற் பெருமானக் கூடலார் கோமானைக் கூடப் பெதுவனேற் கூடென்று-கூட லிழைப்பாள் போற் காட்டி யிழைய திருக்கும் பிழைப்பிற் பிழையாக் கறிந்து. இது கைக்கிளே ; தோழி தன் நெஞ்சொடு கூறியது. விளக்கம் : கூடல் பெருமான் - மதுரைமா நகரின் தலைவன். கூடலார் கோமான் - கூடல் நகரிலுள்ளவர்கள் பாராட்டும் பாண்டியன், கூடு என்று . சுழியே, நீ கூடுவாய் ' என்று சொல்லிக்கொண்டு. கூடல் இழைப்பாள் போல் காட்டி - கூடல் இழைக்கின்ற பாவனையில் இருப்பது போல் காட்டிக் கொண்டு. இழையாது இருக்கும் சுழியிடும் கருத்தின்றி இருக்கும். பிழைப் பில் பிழையாக்கு அறிந்து சுழி கூடாது தவறிவிட்டால் அது காரணமாக நேரிடும் மோசத்தை எண்ணி, பிழைப்பில் - தவறிவிட்டால். பிழைபாக்கு தவறுதல், அல்லது பிழைத்தல்; காரியம் பிழை பாட்டுக்கு உள்ளதல் என்றவாறு. (வே பாக்கு - வே குதல் என்பது போல) மாறனைக் கூடவேண்டும் என்ற மயக்கம் முதல் இரண்டு அடி களில் தொனித்துக்கொண்டே இருக்கின்றது. கூடல் என்ற சொல் மடங்கி மடங்கி வருவதால் மயக்க பாவும் ஒன்று தோன்று கின்றது. (40) (பா - வே.) 3. கூடலர் : 14. பிழைப்பாற்.