பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிழவியாகவே பிறந்தாளோ? 33 நான் சொல்லப்போவதில் சுவை மிக்கது ஒன்றும் இல்லை. ஆல்ை, சோகச் சுமை குறைவின்றி உண்டு. நம்முடைய பாண்டி யன் இதழ் விரிந்த மலர் மாலை அணியப்பெற்றவன். மாற்ருாை வென்று மண்கொண்ட மாபெரும் படைகளையுமுடையவன். வீரத் தையே உமிழும் வேலையுடையவன். இத்தகைய மாறனேக் கண் னெடுத்தும் பார்க்கக் கூடாதென்று என் அன்னை கடிகின்ருள். இளமையுள்ளத்தின் துடிப்பைச் சிறிதும் அறியாதவளாகக் காணப் பெறுகின்ருள் அவள். அவள் இளமைப் பருவ கிலேயுடையவளாக ஒரு காலத்தில் இருந்திலளோ? இன்றுள்ள மூப்புத் தன்மையுடன் தான் என்றும் இருந்தாளோ ? கண்ணுல் பார்ப்பதனுல் என்ன கேடு நேர்ந்துவிடும்? இக் கொடுமையை எத்தனை நாட்களுக்குத்தான் பொறுத்துக்கொண்டிருப்பது? என்கின் ருள். நங்கையின் உளத் துடிப்பைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது : வளையாைய் நீண்டதோள் வாட்கனு யன்ன யிளையளாய் மூத்திலள் கொல்லோ-தளையவிழ்தார் மண்கொண்ட தானே மறங்கனல்வேன் மாறனைக் கண்கொண்டு நோக்கலென் பகள். இது கைக்கிளை , தலைவி தோழிக்குணர்த்துவது. விளக்கம் வளை அவாய் - தோள்வளையத்தை ஆவலோடு கட்டிக் கொண்டதாய், வாள்களுய் - வாள் போன்ற கண்ணேயுடையவளே. தளைய விழ்தார் - அரும்புக் கட்டு விரிந்த மலர் மாலை சூடிய (மாறன). மண் கொண்ட தானை . பல நாடுகளிலும் போர்புரிந்து அக் காடுகளைப் பாண்டியன் வசமாக்கிய சேன. தானை சேனை. மறங்கனல் வேல் . வீரம் உமிழும் வேல்; வீரத்தையே பிரகாசித்துக் கொண்டுள்ள வேல் என்றவாறு. மாறன் . பாண்டியன், கோக்கல் - நோக்காதே (எதிர்மறைப் பொருளில் வந்தது.; இளையளாய் மூத்திலள் கொல்லோ?' என்ற அடியை மீட்டும் மீட்டும் சொல்லிப்பார்த்தால் ஏக்கம், ஏமாற்றம், பரிதாபம், சினம் முதலிய பாவங்கள் கவிதையில் சிறப்பாக அமைந்திருப்பது தெரிய வரும். தலைவியின் சோகம் நிறைந்த காதல் துடிப்பு அதில் தொனிப் பதும் புலனுகும். - (42) {ur . . ఇ!.} 1 డి . ພr poor? தன்.