பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கு மிங்கும் நோக்குகின்ருள். நெடுந்து ரத்தில் தேரின் கொடி மட்டிலும் அவளது கண்களுக்குப் புலளுகின்றது; வரவரத் தெளி வாகத்தெரிகின்றது கயற் கொடி. அந்தக் கொடியையே நோக்கிய வண்ணம் நிற்கின்ருள் அங் கங்கை, சிறிதுநேரம் சென்ற பின்னர் பெரிய தேர் ஒன்று தெரிகின்றது. இன்னும் பார்த்துக்கொண்டே கிற்கின்ருள்; தேரும் நெருங்கி வந்து கொண்டிருக்கின்றது. தேரினுள்ளிருக்கும் செம்மல் யார் என்று அவள் நோக்குகின்ருள் ; ஆள் அடையாளம் தெரியவில்லை; அவனுடைய மணிமுடி மட்டிலும் அவளுடைய கண்ணில் படுகின்றது; அதனேயே நோக்கியவண்னம் இருக்கின்ருள் தேரும் அவளுடைய வீட்டருகில் வருகின்றது : உள்ளே தென்னவன் வீற்றி ருக்கின்றன். அவனுடைய மார்பில் மலர் மாலைகள் கிடந்து புரளும் காட்சி அவளது கண்ணில் படுகின்றது. தேர் வீட்டிற்கு நேரே வந்து கின்றவுடன் மாறனுடைய மார்பில் கிடக்கும் முத்தாரங்கள் மிளிர்வது தெரிகின்றது. சிறிது நேரத்தில் தேரும் போய்விடுகின்றது. அன்று கண்ட காட்சி அங்கங்கையின் மனத்தை விட்டு அகலவே இல்லை. மாறன்பால் மால்கொண்டு மயங்கிய வண்ணம் இருக் கின்ருள் அவள். சரியாக உண்பதுமில்லை; உறங்குவதுமில்லை. இங்கிலையை அவளுடைய அன்னை அறிந்து தன் மகள் வெளியே எட்டிப் பார்க்காத வணணம் காவல் புரியத் தொடங்குகின்ருள். பாவம், அங்கங்கை என்ன செய்வாள்? ஓரிடத்தில் அமர்ந்து கொண்டு அவள் ஏதேதே எண்ணுகின்ருள் சிந்தனையில் ஆழ்கின்ருள். அப்பொழுது அண்டை வீட்டிலுள்ள கங்கைமார் சுண்ணம் இடிக்கும் ஒலியும், அவர்கள் பாடும் வள்ளைப் பாட்டொலியும் அவளது காதில் விழுகின்றன. உடனே தான் காதலிக்கும் பாண்டியனைப்பற்றிப் பாடிக்கொண்டு சுண்ணம் இடிக்கவேண்டும் என்ற ஆசை உண்டா கின்றது. ஆனல், தனது இயலாத நிலையை எண்ணித் தன் நெஞ் சுடன் இவ்வாறு சொல்லிக்கொள்ளுகின்ருள்; தலைநாளில் கண்ட காட்சியை கினைந்து பேசுகின்ருள்: " நான் முதலில் கண்டது கொடி, அடுத்துத் தேரைக் கண்