பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அது கிட்டுமா ? } {}3 கொடிபாடித் தேர்பாடிக் கொய்தண்டர் மாறன் முடிபாடி முத்தாரம் பாடித்-தொடியுலக்கை கைம்மனேயி லோச்சப் பெறுவெனுே யானுமோர் அம்மனைக் காவ லுளேன். - இது கைக்கினை தலைவி நெஞ்சொடு கூறுவது. விளக்கம் , கொடி மீனக் கொடி, கொய் தண் தார் மாறன் . ஆப் பொழுது பறித்துக் கட்டிய குளிர்ந்த மாலையைச் சூடிய பாண்டியனது. முடி கிரீடம், முத்தாரம் . முத்து மால்ே : பாண்டியனுக்குச் சிறப்பாயுள்ளது. தொடி - பூண் (இங்கு தங்கப் பூண்), தொடியுலக்கை ஆண்கட்டிய உலக்கை கைமனை - சிறிய வீடு. கை சிறுமை கைக்குடை, கைத்தடி, கையேடு முதலியன காண்க, ஒச்சுதல் - சுண்ணம் இடிக்கும்பொழுது உலக்கையை மேலோங்கிச் செல்லும்படி கீட்டுதல். யானும் . இதில் உள்ள உம்மை இறந்தது தழீஇயது. அண்டை வீட்டுப் பெண்கள் யாவரும் பாடிச் சுண்ணம் இடிக்கின்றனரே. யானும் அப்பேறு பெறுவேனே என்பதை அந்த உம்மை குறிப்பிடுகின்றது. யானும் . என்பதற்கு அபாக்கியவதியாகிய யானும் என்ற லும் பொருந்தும், அம்மனை - தாய். ஓர் அம்மனே (கதவடைத்துக் காப் பதில்) ஒப்பற்ற தாய் ; ஓர்கின்ற அம்மனை எனக்கொண்டு, குற்றம் ஆராய் கின்ற தாய் எனலும் அமையும், இப் பாடலில் பாடி என்ற சொல் பல முறை வந்து பாடலின் உணர்ச்சியை மிகுவிக்கின்றது. இது சொற்பொருட் பின்வருகிஃப் யணி. ஓர், அம்மனக் காவலுளேன் என்ற இறுதியடியில் கங்கை யின் ஏக்கத் துடிப்பு தொனிக்கின்றது. இந்த அடியைத் திரும்பத் திரும்பப் பாடி அனுபவித்தால் அத் துடிப்பு வெளிப்படுவதை அறிந்து மகிழலாம். (43) (பா , வே.). 4. மார்பன்.

  • காதார் குழையாடப் பைம்பூண் கலனுடக் கோதை குழலாட வண்டின் குழாமாடச் சிதப் புனலாடிச் சிற்றம் பலம்பாடி வேதப் பொருள் பாடி அப்பொருளா மாபாடி சோதி திறம்பாடிச் சூழ்கொன்றைத் தார்பாடி ஆதி திறம்பாடி அந்தமா மாபாடிப் - பேதித்து நம்மை வளர்த்தெடுத்த பெய்வதைன் பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்

-திருவாச - திருவெம் 14, என்ற திருவெம்பாவையிலும் ஆட பாடி என்ற சொற்கள் மீட்டும் மீட்டும் இவ்வாறு வந்து உணர்ச்சியை மிகுதிப்படுத்துவதைக் காண்க.