பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[45] அன்னேயின் அறியாமை கிடை என்பது ஒருவகைப் பறவை. வேடர்கள் அதனைக் கண்ணி வைத்துப் பிடிப்பர். தாங்கள் கூட்டில் வைத்து வளர்க்கும் பார்வைக் காடையை இதற்குத் துணையாகவும் கொள்வர். பார்வைக் காடை உள்ள கூட்டைக் காட்டில் வைத்து அதைச் சுற்றிக் கண் ணியை வைத்துவிட்டு மறைந்திருப்பர். கூட்டினுள்ளிருக்கும் பார் வைக் காடை தனக்குப் பழக்கமான ஒலி கொடுத்து தன் இனக் காடைகளை அழைக்கும். ஏமாந்த காடைகள் வந்து கண்ணிக்குள் மாட்டிக்கொண்டுவிடும். ஒருநாள்வேடன் ஒருவன் பார்வைக் காடை கூட்டை விட்டுப் பறந்து சென்றதை அறியாமல் வெறுங் கூட்டை வீட்டிற்குள் காக்கத் தொடங்குகின்றன். என்னதான் தீனி கொடுத்து எவ்வளவு அன்பாக வளர்த்தாலும் காடையின் மனம் வயல் பரப்பில் தடையின்றித் தன் விருப்பப்படித் திரியவேண்டும் என்றுதான் எண் ணும். இது காடையின் இயல்பு. 艾 烹调 ஒரு நாள் பாண்டியன் தெருவின் வழியாக உலா வருகின்ருன். வீட்டினுள்ளிருக்கும் பருவ மங்கை யொருத்தி கொட்டுமுழக்கத்தைக் கேட்டுப் புற வாயில்வரை வந்து கதவருகில் கின்றுகொண்டு அவனைக் காண்கின்ருள். அவள் தன் உள்ளத்தைப் பறிகொடுத்து அப்படியே மதிமயங்கி ஒன்றுங் தோன்ருது நிற்கின்ருள். இங்கிலையில் அவளுடைய அன்னை அங்கு வருகின்ருள் அவளது கிலேயினை அறிகின்ருள். உடனே மதியிழந்து கிற்கும் தன் மகளை உள்ளே கடத்திச் சென்று கதவை அடைத்துக் காவல் புரிகின்ருள். இனி வெளியில் எட்டிப் பார்ப்பதற்குக் கூட அவளுக்கு வழி இல்லை. வீட்டி னுள் இருந்துகொண்டே பலவாருக எண்ணுகின்ருள் அம் மங்கை. இவ்வாறு அவள் தன் நெஞ்சுடன் சொல்லிக் கொள்ளுகின்ருள் : நெஞ்சமே, என்னே என் அன்னேயின் அறியாமை : பாண்டி யன்பால் சென்ற என் நெஞ்சின் இயல்பை அறியாத அன்னை, அறி