பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[46] பணிந்தவருக்குமா தண்டனை? tiருவமங்கையரின் மேனி யழகை கம்மவர்கள் மிகவும் அனுப வித்து மகிழ்ந்துள்ளனர். கவிஞர் ஒருவர் ஒருத்தியின் மேனியழகினை

உண்ண உருக்கிய ஆணெய்போல் மேனியள் :

என்று ஒப்பிட்டு மகிழ்ந்துள்ளார். மங்கையது மேனியின் நிறம் உருக் கின பசுவின் நெய்யின் நிறத்தை ஒத்திருக்கின்றதாம். பெரும்பாலும் கவிஞர்கள் மகளிர் மேனியின் நிறத்தை மாந்தளிர் நிறத்துடன்தான் ஒப்பிடுவதுண்டு. மாந்தளிர்களிலும் பலவகையுண்டு. பழுத்த பசுமை யிலிருந்து இருண்ட சிவப்பு வரையிலும் அந்நிறம் இருப்பதைக் காண லாம். மகளிர்களிடையேயும் இவ்வண்ண வேறுபாடுகள் இருப்பதைக் கூர்ந்து கவனித்தால் தெரியவரும். எல்லா கிறவேறுபாடுகளுமே இளமையையும் உடல் நலத்தையும் எடுத்துக்காட்டுவதுடன் மேனிக்கும் வனப்பினை நல்குவன. காதல் கோய் மகளிரிடம் தோன்றி விட்டால் இந்த வனப்பெல்லாம் (graeே) நீங்கி மேனி வெளுத்து விடும். வெளுத்துப்போன நிறத்தைப் பசலை என்றும் பசப்பு என்றும் வழங்குவர். 烹调 奚 敛 அக்காலத்தில் அரசர்கள் போர்மேற் சென்றிருக்கும்பொழுது குடிகள், அவர்கள் வெற்றியுடன் திரும்பவேண்டுமென்று வாழ்த்திக் கொண்டிருப்பது வழக்கம். வெற்றியுடன் திரும்பும் அரசர்களும் தாம் ஊர் திரும்பியவுடன் தம் மக்கள் காண உலா வருதல் மரபாக இருந்து வந்தது. ஒரு சமயம் பாண்டியருள் இளங்கோ ஒருவன் ஆண்ட பொழுது அவன் கீழிருந்த சிற்றரசர்கள் அவன் சிறுவன் தானே என்று எண்ணி இகழ்ந்து இறுமாந்திருக்கின்றனர். அவர்கள் திறையும் செலுத்தவில்லை; வந்து வணங்கவும் இல்லை. இதைக் கண்டு சீற்றங்கொண்ட இளவேந்தன் யானைப் படைகளுடன் சென்று அவர்களுடன் பொருது, அவர்களது கிலங்களையும் கைப்பற்றிக்

  • சீவகசிந்தா - 480. -