பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 முத்தொள்ளாயிர விளக்கம் அன்று மாலையில் மாறன் மதயானையின்மீது ஏறி உலா வருகின் முன். கையில் வாளுடன் கூடிய அவனது பெருமிதத் தோற்றத்தை இந்த கங்கை காண்கின்ருள். அவன் செல்லும் வழியை கெடிது நோக்குகின்ருள். அன்றிரவும் அவள் சரியாக உறங்கவில்லை. காதல் ~. மயக்கத்திலுள்ளவளுக்கு எப்படி உறக் கம் வரும் : நெடுநேரம் உறங்காதிருந்து நள்ளிரவில் சற்று இமைகளே மூடுகின்ருள். கனவு காண்கின்ருள். அன்று வாளேந்திய கோலத்துடன் மதயானைமேல் செல்லும் காட்சியுடன் அவளது கனவில் பாண்டியன் காணப்படுகின் ரூன். அதை கனவு என்று கருதிக் கள்வன் அகப்பட்டுக் கொண் டான் 1’ என்று கண்களைப் பொத்திக் கொள்ளுகின்ருள். இரவு முழுவதும் சரியாக உறங்கவில்லையாதலால் அவள் மறுநாள் பொழுது புலர்ந்த பின்னரும் எழுந்திராமல் நன்கு உறங்குகின்ருள் : கைகளால் முகத்தை மூடியவண்ணம் உறங்குகின்ருள். செவிலித் தாயர் வந்து அவளை எழுப்புகின்றனர். விழித்தவள், ! அன்னமீர் : என் வளையல்களைக் கவர்ந்து சென்ற கள்வன் அகப்பட்டுக் கொண் டான். வாளேந்திய கையுடன் யானையின்மீது ஏறிவந்து நேற்றிரவில் என் கண்ணினுள் புகுந்தான். கண்களைத் திறந்தால் ஒருவருக்கும் தெரியாமல் அவன் மறைந்துவிடுவான். உயிர் பிரியினும் கைகளை நீக்கிக் கண்களைத் திறவேன்' என்கின்ருள். தலைவியின் நிலையைக் கவிஞர் அழகிய சொல்லோவியத்தால் காட்டுகின்ருர் : தளையவிழும் பூங்கோதைத் தாயரே யாவி களையினுமென் கைதிறந்து காட்டேன்-வளைகொடுபோம் வன்கண்ணன் வாண்மாறன் மால்யான தன்னுடன்வந் தென்கண் புகுந்தா னிரா.