பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகப்பட்டுக்கொண்டான் கள்வன் ! 1 #3 இது கைக்கிளை; தலைவி செவிலித்தாயரிடம் உரைப்பது. விளக்கம் : தளேயவிழும் பூங்கோதைத் தாயரே - அரும்புக் கட்டு அவிழ்ந்த பூக்களாலான மாலை சூடிய அன்னமீர். ஆவி காேயினும் என் உயிர் போனுலும். வளை கொடு போம் வளையல்களைக் களவாடிக்கொண்டு செல்லும், வன்கண்ணன் இரக்கமில்லாதவன்; அஞ்சாதவன். வாள் மாறன் . வாள் ஏந்திய பாண்டியன். மால் யானை பெரிய மதயானே. இரா - இரவு. அகப்பட்டுக்கொண்டான் கள்வன் ' என்ற பாவம் பாட்டினுள் கன்கு அமைந்திருப்பதைத் தெளிவாகக் காணலாம். வன்கண்ணன் என் கண் புகுந்தான் என்பது இனிமையாக அமைந்துள்ளது. பாடலைத் திரும்பத் திரும்பப் பாடி கங்கையின் அனுபவத்தை உணர்க. (47)