பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[49] என்ன பாவம் செய்தேனுே ? இழுதியின்மீது கெஞ்சம் வைத்திருந்த வ ஞ் சி யொருத்தி பஞ்சணையின்மீது படுத்திருக்கின்ருள். உறக்கம் வராமல் புரண்டு கொண்டிருக்கின்ருள்; இரவு நெடுநேரம்வரை விழித்துக்கொண்டே இருக்கின்ருள். எப்படியோ சிறிது உறக்கம் வந்து கண்ணிமைகளை மூடுகின்ருள். கனவும் வந்து விடுகின்றது. கனவில் பாண்டியன் அவளே மெல்ல நெருங்கிக் கைகளைப் பற்றுகின்றன். கங்கை அதை உண்மையென எண்ணி எழுந்து பார்க்கின்ருள். மாறன் மாயமாய் மறைந்து விடுகின்ருன் ! இப்பொழுதுதான் அவளுக்குத் தான் கண்டது கனவு என்பது புலனுகின்றது. கனவு என்று கினைத்து எழுந்து கனவையும் இழந்த மைக்கு மிகவும் வருந்துகின்ருள். பாண் டியனே க் கூடுவதற்கு கல்வினை செய்யவில்லை என்ருலும், இந்தக் கனவையும் இழப்பதற்கு என்ன தீவினை செய்திருக்கவேண்டுமோ என்று ஏங்குகின்ருள். இவ்வாறு விடியுமளவும் ஏங்கி ஏங்கிக் காலத்தைக் கழிக்கின்ருள், விடிந்தவுடன் அவளுடைய உயிர்த் தோழி அவளிடம் வருகின்ருள். தலைவி தனக்குற்றதை அவளிடம் உரைக்கின்ருள். தலைவி தோழியிடம் உரைப்பதாகக் கவிஞர் புனைந்த சொல் லோவியம் இது : ஓராற்ரு னென்க ரிைமைபொருந்த வந்திலேயே கூரார்வேன் மாறனென் கைப்பற்ற - வாரா நனவென் றெழுந்திருந்தே நல்வினையொன் நில்லேன் கனவு மிழந்திருந்த வாறு. - {uா வே. -ெ 1 தெழுந்தே னல்வினையொன்