பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[52] ஏந்தல நாடிய ஏந்திழையின் நெஞ்சம் ஒரு பெரிய அடர்ந்த காட்டில் வேடர்கள் மான் வேட்டையாடு கின்றனர். அந்தக் காட்டின் குறுக்கே ஓர் ஆழமான ேேராடை உள்ளது ; அதில் வெள்ளம் கரை புரண்டோடுகின்றது. அந்த் ஓடையைத் தாண்டிச் செல்வதற்கு ஒரே ஓர் இடத்தில் இருபுறமும் பாறைகள் நெருங்கியுள்ளன. அம்பு பாய்ந்த உடலுடன் பெண்மான் ஒன்று அந்த இடத்தில் கரையைத் தாண்டியோட கினைக்கின்றது. ஆளுல் ஆட்கள் அடிக்கடி அந்த இடத்தில் தாண்டிப் போய்க் கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றனர். இரத்தம் வடியும் கிலேயுடன் கோவு தாங்கமுடியாமல் அப் பெண்மான் ஓடையின் கரை யிலுள்ள ஒரு புதரில் மறைந்து கிற்கின்றது. இதை கினைவில் வைத்துக் கொண்டு மேலே பார்ப்போம். - X X 葛 கூடலார் கோமான் குஞ்சரம் ஏறித் தெரு வழியாக உலா வருகின்றன். அதைக் காணும் காரிகை யொருத்தி காவலன்மீது காதல் கொள்ளுகின்ருள். மாரன் அவள்மீது மலரம்புகளை ஏவிய வண்ணமிருக்கின்ருன். சிறிது நேரத்தில் உலா வந்த பாண்டியன் தனது அரண்மனையை அடைந்து விடுகின்றன். ஆயினும், கங்கையின் நெஞ்சம் சும்மா இருக்கவில்லை. அதுவும் பாண்டியனைத் தொடர்ந்து அரண்மனையை நோக்கிச் செல்லுகின்றது. அரண்மனைவாயிலில் கூட்டம் அதிகமிருந்ததால் அதனைக் கடந்து உள்ளே செல்லமுடியாமல், ஓர் ஓரத்தில் கின்றுகொண்டு திண்டாடு கின்றது. அரண்மனைக்கு உள்ளே போகின்றவர்கள் போய்க்கொண் டிருக்கின்றனர்; உள்ளிருந்து வெளியே வருகின்றவர்களும் வந்து கொண்டிருக்கின்றனர். தன்னைப் பார்த்துச் சிலர் நகக்கூடும் என்று நாணிக் கதவின் பக்கத்தில் மறைந்து கிற்கின்றது அவளுடைய மனம். இவ்வாறு கற்பனையுலகில் உலவுகின்ற தலைவியிடம் அவளுடைய