பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முத்தொள்ளாயிர விளக்கம் ஆருயிர்த்தோழி வருகின்ருள் : “ என்ன மெய் மறந்த நிலையி லிருக்கின்ருயே?’ என்று தலைவியை வினவுகின்ருள் தோழி. தலைவி தனது நிலையை விளக்குவதுடன் கூடலார் கோமான் பின் தொடர்ந்து சென்ற என் உள்ளம் அம்புபட்ட பெண்மான் போலல்லவா.உளைந்து கிற்கின்றது ?" என்கின்ருள். தலைவியின் நிலையைக் காட்டும் கவிஞரின் செர்ல்லோவியம் இது : புகுவார்க் கிடங்கொடா போதுவார்க் கொல்கா நகுவாரை நாணி மறையா-விகுகரையின் ஏமான் பிணைபோல நின்றதே கூடலார் கோமான்யின் சென்றவென் னெஞ்சு, இது கைக்கிளை , தலைவி தன் மனநிலையைத் தோழிக்கு உரைப்பது. விளக்கம் : புகுவார்க்கு அரண்மனையின் உள்ளே செல்லுகின்றவர் களுக்கு. இடங்கொடா இடங்கொடுத்து. போதுவார்க்கு - அரண்மனையி லிருந்து வெளியே வருகின்றவர்கட்கு, ஒல்கா ஒதுங்கி, நகுவாரை காணி மறையா தன்னைப் பார்த்துப் பரிகசிக்கும் இயல்பினரைக் கண்டு வெட்கிக் கதவின் அருகில் மறைந்து கொடா ஒல்கா, மறையா இந்த மூன்றும் செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். இவை பாட்டின் உணர்ச் சியை மிகுவிக்கின்றன. இகுகரை - தாண்டிச் செல்வதற்கேற்றவாறு தாழ்க் திருக்கும் கரை. ஏ மான் - அம்பு ஏவுண்டமான். ஏ . அம்பு. பிணை - பெண் மான், கூடலார் கோமான் - பாண்டியன், கூட்ல் - மதுரை, கோமான் . அரசன். ஏமான் பிணைபோல கின்றதே.என் நெஞ்சு என்ற பகுதியை உணர்ச்சியுடன் பாடுங்கால் தலைவியின் ஏக்க பாவம் புலனுவதை அறியலாம். (51) {யா . வே. 3 - 9, இகுகரையி னேமாப்