பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாடை தரும் தொல்லை 簧25 இது கைக்கிளை , தலைவி தோழிக்குச் சொல்லுவது. விளக்கம் : பிணிகிடந்தார்க்கு நோய்வாய்ப் பட்டவர்கட்கு, பிறந்த இாள் - பிறந்த நட்சத்திரம். அணி இழை - அழகிய அணிகலன்களை அணிக் துள்ள தோழி (அன்மொழித் தொகை). வருமால் வரும்; ஆல், அசை. மணி யானை - மணிகள் கட்டப்பட்ட யானை. மாறன், வழுதி - பாண்டியன், காதல் மயக்கத்தில் பாண்டியனது பெயரை இருமுறை அடுக்கியவாறு, மணவா - மணந்து கூடாத, மருள் மாலை மயக்கமான மாலைக் காலம், இயல்பாக வீசும் வாடையைச் சினந்து வீசுவதாகவும், அது வந்து மோதுவதைச் சீறி மோதுவதாகவும் கருதும் மனநிலை காதல் மயக்கத்தால் ஏற்படுவது. இது பாட்டின் உணர்ச்சியை மிகுவிக் கின்றது. (52)