பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரவு படும் பாடு ! † 29 நங்கையின் எண்ணங்களுக்குக் கவிஞர் கொடுத்த சொல் வடிவம் இது புல்லாதா வல்லே புலர்கென்பர் புல்லினுக் நில்லா பிரவே நெடிதென்பர்-தல்ல விராஅமலர்த் தார்மாறன் வெண்சாந் தகல மிராவளிப் பட்ட திது. இது கைக்கிளை; தலைவி நெஞ்சொடு கிளப்பது. விளக்கம் : புல்லாதார் மாறனது மார்பை (அகலம்) அணையாதவர் கள். வல்லே புலர்க என்பர் விரைவாக விடிந்து விடு என்பார்கள் (இரவைப் பார்த்து). புல்லினர் அனந்தவர்கள். கில்லாய் இரவே கெடிது என்பர் - இரவே, நீ நீண்ட நேரம் தங்குவாயாக என்பார்கள், விராஅ மலர் - விரவிய மலர் : பல மலர்களும் கலந்த மாலையை மாறன் அணிந்துள்ளான் என்ற வாறு தார் - மாலை. வெண்சாந்து - வெண்மையான சந்தனம். அகலம் . மார்பு. இரா அளிப்பட்டது - இரவில் அருளுதலைப் பொருந்திய நிலை இது, இரவில் இரங்குதலைப் பொருந்திய கிலே இது. அளிப்பட்டது ' என்பதைச் சிலேடையாகப் பொருள் கொண்டு இரவின் பரிதாப நிலையைக் காண்க. ஏக்க பாவம் கிறைந்த இப் பாடல் கவிதையனுபவத்தின் கொடு முடியை உணரச்செய்கின்றது. பாடலைப்பாடி அனுபவித்தால் இது நமக்குத் தட்டுப்படும். (54) (பா - வே.) 9. விராமலர்த்; 13. மிராவளியப். 9