பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மகளிர் கண்களிலும் முத்துக்கள் | 3 | தான். அவனது மார்பைத் தழுவக் கருதிய மகளிரின் கண்களிலும் முத்துக்கள் உண்டாகத் தொடங்கிவிட்டன-கண்ணிராக ' என் கின்ருள். கங்கையின் மனநிலையைத் தோழியின் கூற்ருகக் கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது : இப்பியின் றிட்ட வெறிகதிர் நித்திலங் கொற்கையே யல்ல படுவது-கொற்கைக் குருதிவேன் மாறன் குளிர்சாத் தகலங் கருதியார் கண்ணும் படும். இது கைக்கிளை , தோழி தன் நெஞ்சொடு நவில்வது. விளக்கம் : இப்பி - முத்துச்சிப்பி, எறிகதிர் நீத்திலம் - கிலவுபோன்று ஒளி வீசும் முத்துக்கள். கொற்கையே அல்ல படுவது - கொற்கையில் மட்டி லும் உள்ளன என்று கருதுதல் கூடாது. கொற்கைக் குருதிவேல் மாறன் - கொற்கை நகருக்குத் தலைவனுன இரத்தம் தோய்ந்த வேல் ஏந்திய பாண்டி யன். குளிர்சாந்து அகலம் குளிர்ந்த சந்தனம் பூசிய மார்பு. கருதியார் . தழுவ வேண்டும் என்று கினைக்கும் மகளிர். கண்ணும் படும் - கண்ணிலும் காணலாம். கண்ணினின்று வடியும் கீர்த்துளிகளை முத்துக்கள் என்று கூறு வதில் ஒரு சோக பாவம் கிழலிடுகின்றது. இந்தச் சோகத்தில் நகைச் சுவையின் சாயலும் கலந்து மிளிர்கின்றது. பாட்டைத் திரும்பத் திரும்பப் பாடில்ை இது வெளிப்படுவதைக் காணலாம். (55)