பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[57] விணுகக் கழிந்த இரவு! பெண்ணுெருத்தி பாண்டியன்மீது காதல் கொள்ளுகின்ருள். காதல் முற்றி எப்பொழுதும் அவள் அவன் நினைவாகவே இருக் கின்ருள்.அவளது கனவிலும் பாண்டியன் வருகின்ருன் கனவில் கண்ட நிகழ்ச்சிகளைத் தன் தோழியிடம் கூறுகின்ருள். நேற்று இரவு மாறன் கூடும் நோக்கத்துடன் என்ன நெருங்கி ஞன். யான் அவனிடம் பிணங்கினேன் இவ்வளவு நாட்களாக என்னைத் தவிக்கவிட்டானே என்றுதான் அவ்வாறு செய்தேன். அவன் எத்தனையோ காரணங்களைக் கூறி என்னைத் தெளிவிக்க முயன்ருன் யான் தெளியாமல் ஊடல் நிலையிலேயே இருந்தேன்; இறுதியில் என் மனம் இளகியது இணங்கும் நோக்கத்துடன் அவன் அருகில் சென்றேன். இப்பொழுது அவன் ஊடத் தொடங்கி விட் டான். யான் எவ்வளவோ சமாதானம் சொல்லிப் பார்த்தேன். அவ னும் தெளியாமலேயே பிணங்கி இருந்தான். எனக்கும் கோபம் வந்து விட்டது.”

  • பான்ஊடத் தான் உணர்த்த யான் உணரா விட்டதற்பின்

தான் ஊட யான்உணர்த்தத் தான் உணரான் ! ? என்று தனக் கும் பாண்டியனுக்கும் நேர்ந்த சிறு பிணக்குகளைக் கூறியவள் அதல்ை ஏற்பட்ட பேரிழப்பினையும் புலப்படுத்துகின்ருள். 'இந்தச் சச்சரவுகளிளுலேயே இரவு முழுதும் கழிந்தது அவ னது மார்பினை அடைந்த மலர்மாலேயில் தேன் ஊறுகின்றது ; அவனைத் தழுவிய காரணத்தால் அஃது இன்பத்தைப் பெருக்கிக் கொள்ளுகின்றது. அந்த வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை. தென் மலையில் பிறந்த சந்தனம் அவனது மார்பில் தோய்ந்திருக்கின்றது. அஃது எனக்குக் கிடைக்கவில்லையே!” - தேனூறு கொய்தார் வழுதி குளிர்சாந் தணியகலம் எய்தாது இராக்கழிந்த வாறு. என்று ஏங்கி இரங்குகின்ருள்.