பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[58] எங்கும் மங்கல ஒலி கிள்ளி என்பான் சோழவேந்தர்களுள் ஒருவன். அவனது நாட்டில் மாரி பொய்ப்பினும் தான் பொய்யா காவிரி நதி பெருக் கெடுத்து ஓடுவதால் நெல் விளச்சலுக்குக் குறைவில்லை. சோழ நாடு சோறுடைத்து என்ற பழமொழியும் இதகுலன்ருே எழுந்தது? தைமாதத்தில் அக் காட்டில் மக்களிடையே ஒரு தனியான மகிழ்ச்சிப் பெருக்கினைக் காணலாம். அம்மாதத்தில்தான் அறுவடைக் காலம் தொடங்குகின்றது. சோழ நாட்டில் அறுவடைக்காலத்தில் எம்மருங்கும் நெல்ல டிக்கும் களங்களைக் காணலாம் ; வைக்கோற்போர்களைப் பார்க்கலாம். வண்டிகள் வரிசை வரிசையாகச் செல்லும் காட்சியைக் கண்ணுற லாம். வேலையாட்களின் ஆரவாரத்தை எத்திசையிலும் கேட்கலாம். அக்காட்டில் களத்தில் கெல்லேயடித்துக் களஞ்சியமாகக் குவித்து அதனைக்காப்பான் வேண்டிக் களத்திலேயே படுத்துறங்கும் பலர் அதி காலையில் விழித்துக்கொண்டு வைக்கோற்போர்மீது ஏறி நின்று காவ லோஒ என்று வேலை செய்வோரைக் கூவி யழைப்பர். இங்ஙனம் ஆயிரக்கணக்கான வைக்கோற் போர்களின்மீது ஏறிக் கூவும் ஆர வாரம், மன்னரின் வீரர்கள்தும்பை மலர்களைச் சூடிக்கொண்டு மாற்ரு ரைக்கொல்லும் யானைகளின்மீது ஏறிக்கொண்டு தத்தம் பகுதிகளைச் சார்ந்த வீரர்களைத் திரண்டுவருமாறு காவலோஒ என்று அழைக்கும் ஆரவாரத்தை ஒத்திருக்கின்றது. இரண்டற்கும் ஒரே சொல் வழங்கு மாயினும், ஒன்று கெற்களத்திற்கு வருமாறு உழவர்களைக் கூவி யழைப்பது; மற்ருென்று யோர்க்களத்திற்கு வருமாறு வீரர்களைச் கூவி விளிப்பது. சோழநாட்டின் வளத்தைத் தன்னெடு எதிர்ப்பட்ட வேற்று நாட்டார் சிலருக்கு எடுத்துரைப்பதுபோல் கவிஞர் தன் சொல்லோ வியத்தை அமைத்துள்ளார். இதோ அச்சொல்லோவியம்: