பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[59] எழில் கொழிக்கும் உறந்தை இலரைக் கொண்டு மகளிர் தம்மை ஒப்பனைசெய்து கொள்வது தமிழகத்தின் தனிப்பட்ட காகரிகம். வடபுலத்தில் இந்த நாகரிகத் தைக் காண்பது அரிது. முல்லை அரும்புகளைத் தொடுத்தோ, கனகாம்பர மலர்களைக் கட்டியோ கருங்குழலின்மீது சூடுவது ஒரு தனிப்பட்ட அழகு என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. பன்னிறப் பூக்களால் தொடுக்கப்பெற்ற கதம்பமாலையும் கார் வண்ணக் குழலுக்குப் பொலிவுதருவதைக் காணலாம். சோழ நாட்டின் தலைநகராகிய உறந்தை மலர் வகைகட்குப் பெயர்போனது. மாலைப்பொழுதில் மாநகரின் தெருக்களின் வழியாகப் போனல் பல இடங்களில் பூ விற்போர் பன்னிறப் பூக்களைத் தொடுத்து மாலையாக விற்பதைக் காணலாம். அங்காடிக் கடை கள், சோலே ஓரங்கள், தெருவின் இருபுறங்கள்-எம்மருங்கும் பூக்கள் மயம் மலர்கள் வாடியோ துவண்டோ காணப்பெறின் மலர் விற்போரே அவற்றைத் தெருவில் தூக்கி எறிந்து விடுவர். அதி காலையில் எழுந்து மக்கள் கடமாடுவதற்கு முன்பு தெருக்களை உற்று கோக்கினல் முதல் நாள் மாலையில் கிள்ளிக் களைந்தெறிந்த பூக்கள் வீதியில் பரவிக் கிடந்து பன்னிறமுள்ள வான வில்லைப்போல் இலங்கு வதைக காணலாம. கழித்துக் தள்ளின. பூக்களின் அளவு இவ்வாறு மிகுதியாகக் காணப்பெறுகின்றது என்ருல், விற்பனைக்கு வந்த பூக்களின் அளவு எவ்வளவு இருக்கும் அவற்றை அணிந்த மகளிர் எத்தனை பேர் : அம்மலர்களை விளைவித்த மலர்ப்பொழில்கள் எத்தனை இருக்குமோ ? என்றெல்லாம் சிக்திக்கத் தோன்றுகின்றதல்லவா ? இதல்ை நகரின் சிறப்பு, மக்கட்டொகுதி, செல்வ வளன், பூம்பொழில்களின் பெருக்கம், நாகரிகப்பண்பு முதலிய அனைத்தும் புலனுகின்றன.