பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

#4s; முத்தொள்ளாயிர விளக்கம் பூக்களை அளவுகோலாகக் கொண்டே உறையூரின் வளத்தைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது: மாலே விலபகர்வார் கிள்ளிக் களைந்தபூச் சால மிகுவதோர் தன்மைத்தாய்க்-காலேயே விற்பயில் வானகம் போலுமே வெல்வளவன் பொற்பா ருறத்தை யகம். இது உறந்தையின் வளத்தை உவந்து ஒதுவது. விளக்கம் : மாலே - முதல் நாள் மாலை நேரத்தில். விலே பகள் வார் . பூ விலே கூறுவோர். கிள்ளிக்களேந்த பூ தொடுக்கும் பொழுது (வடுவுற்றும் சுருண்டும் வேறு குறையுடனும் இருத்தலால் கிள்ளியால்)களைக்தெறியப்பட்ட பூக்கள், சால மிகுதியாக, காலேயே மறுநாள் அதிகாலையில், வில் பயில் வானகம்போலுமே . இந்திர வில்லிட்ட வானம்போல் காட்சியளிக்கும். வெல்வனவன் - வெற்றியையுடைய சோழன், வளவன் - சோழன். பொற்பு ஆர் உறந்தை அழகு கிறைந்தஉறையூர். உறந்தையின் செல்வ மிகுதியையும் பிற சிறப்புக்களையும் காட்டும் ஓர் அரிய பாடல். இங்ஙனம் செல்வத்தின் உயர்ச்சியைக் காட்டுவது உதாத்த அணியின்பாற் படும். இதனை வீறுகோளணி, என்றும் வழங்குவர். (6) { ur - $621.) 5. sr&o z 8. கருவியதோர் ; ; , தன்மைத்தால் , 8. கால்டி.