பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[80] இன்றும் நிலை சரியாக இல்லை! சோ ழப் பேரரசு பல சிற்றரசுகளைக்கொண்டது. எத்தனையோ குறு நில மன்னர்கள் சோழனுக்குத் திறை செலுத்திக்கொண்டு அவனது கொடியின்கீழ் அமைதியாக வாழ்ந்தனர்; ஆணைக்குக் கட்டுப்பட்டிருந்தனர். திறை செலுத்தவேண்டியவர்கள் குறிப்பிட்ட நாளுக்குள் திறையினைச் செலுத்திவிடவேண்டும். அங்ஙனம் செலுத் தத் தவறிஞல், அவர்கட்குப் பெருந்தண்டனை கிடைக்கும். சில சமயம் தம் நாட்டினையே இழக்கவும் நேரிடலாம். ஒரு சமயம் சோழனது அரண்மனை வாயிலில் பெருங்கூட்டம் காணப்படுகின்றது. ஏராளமான சிற்றரசர்கள் தத்தம் திறைப்பொருள் களுடன் அங்குக் காத்துக் கிடக்கின்றனர். அன்றைய முதல் நாளும் இம்மாதிரியாகப் பலர் கப்பம் செலுத்தினர்; அன்று மாலைவரைசெலுத் தியவண்ண மிருந்தனர். அவசர அவசரமாகச் சிற்றரசர்கள் அவ னது திருவடியைத் தலை தாழ்த்தி வணங்கிச் சென்றபொழுது அவர் களது பொன்முடிகள் உராய்ந்ததால் சோழனது காலில் புண் ஏற்பட்டு விடுகின்றது. அந்தப் புண் மறு நாள் குணமடையவில்லை. அதன் காரணமாகத்தான் கோட்டைவாயில் திறக்கப்பெருமலிருக்கின்றது. வாயிற்காவலன் ஒருவன் வந்து அவர்களிடம் இவ்வாறு கூறு கின்ருன் : வேந்தர்களே, இன்று எம்மன்னர் திறை வாங்கும் கிலேயில் இல்லை. நேற்றுச் செலுத்தியவர்கள் முடிதாழ்த்தி வணங்கிய பொழுது அவர்தம் முடிகள் உராய்ந்ததால் எம் மன்னரின் திருவடி யில் ஏற்பட்ட புண் இன்னும் மாறவில்லை. சற்றுப் பொறுத்திருந்து கொடுங்கள் அவசரப்படாதீர்கள் ' என்கின்ருன். இந்தக் காட்சியைக் காணும் கவிஞர் அதனை அழகிய சொற் படத்தால் உருவாக்கித் தருகின்றர். அவரது சொல்லோவியம் இது: