பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/174

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[6 is யானையின் போர்த் திறன் tiண்டைக் காலத்தில் அரசர்கள் த ம் வசிக்கும் நகரைச் சுற்றிக் கனத்த மதில் எழுப்பிக் கோட்டைகளை அமைத்து வந்தனர். பகைவர்கள் மதிலைக் கடந்து எளிதில் உள்ளே புகமுடியாது. மதிற் சுவர் பகைவர்களின் ஏணிக்கும் எட்டாது ; ஆகவே ஏணியைக் கொண்டு ஏறிமதிலைக் கடத்தல் இயலாது. மிக அகன்ற அடிப்பரப்பை யுடையதால், பகைவர்கள் குடைந்தும் உள்ளே புக முடியாது. கல் லிட்டிகைகளாற் கட்டப்பெற்றமையால் அதனை எளிதில் குத்திக் குடையவும் இயலாது. இத்தகைய கோட்டைக்கு ஒரே ஒரு வாயில் உண்டு. அந்த வாயிலே உட்புறமாக ஒரு பெரிய மரக் கதவாலும், வெளிப்புறமாக ஈட்டிகளால் அமைந்த மற்ருெரு இரும்புக் கதவாலும் அடைத்து வைப்பர். இதனுல் கோட்டைக்குள்ளிருப்பவர்கட்கு நல்ல பாதுகாப்பு. இத்தகைய பாதுகாப்பான கோட்டைக்குள் கிள்ளி என்ற சோழ னின் பகையரசன் ஒருவன் வதிகின்ருன் ஒருசமயம் கிள்ளிக்கும் இந்த அரசனுக்கும் போர் தொடங்குகின்றது. கிள்ளியினுடைய படைகள் கோட்டையை வளைத்துக் கொள்ளுகின்றன. அவனது போர் யானை ஒன்று சீற்றங்கொண்டு வேகமாகப் பாய்ந்து ஈட்டியாலான கதவுகளே ஒடுக்கி அதனை நிலைகுலையச் செய்து விடுகின்றது. பகைவர்களின் ஆற்றலே யானை சிறிதும் பொருட்படுத்தவில்லை. அது வேகமாகப் பாய்ந்து மதிற்கதவைக் குத்தித் தூக்கிவிடுகின்றது. கதவு யானே யின் கொம்புகளில் சிக்கிக்கொள்ளுகின்றது. கதவின உதறி எறியப் பார்க்கின்றது யானே கதவு கழலவில்லை. இதனுல் யானைக்கும் புதிய தோர் ஆங்காரம் பிறந்து மாட்டிய கதவுடன் தும்பிக்கையை மேலே நீட்டிக் கொண்டு வேகமாக ஓடுகின்றது; அங்கனம் ஓடி சேனையின் நடுப்பகுதிக்கு வந்து விடுகின்றது. அதன் தோற்றம் குளிர்ந்த கடல் நடுவில் தோன்றும் பாய் கட்டிய மரக்கலத்தைப் போன்று காணப் படுகின்றது. யானை மரக்கலத்தைப் போன்றும், அதன் உயர்த்திய கை கூம்பு போன்றும், எயிற்கதவு பாய்மரம் போன்றும் தோற்ற மளிக்கின்றன. -