பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[64] பழக்கமே காரணம் பாவ்லோவ் (Paview) என்ற இரஷ்ய அறிஞர் செய்த சோதனையொன்று உலகப்புகழ்பெற்றது. அவர் நாய் ஒன்றற்கு காள்தோறும் மணி யொலியின எழுப்பி, அதன் பிறகு உணவு ஊட்டி வந்தார். இவ்வாறு உணவு வருவதற்கு முன்னர் மணி யொலியினைக் கேட்டுப் பழகிய நாய் மணி யொலிக்கும் உணவு என்ற பொருளையே கண்டுவிடுகின்றது. உணவு வரும்போது நாயின் வாயில் உமிழ் நீர் ஊறுதல், வயிற்றில் அகட்டு நீர் ஊறுதல் போன்ற செயல்கள் மணியொலி கேட்டவுடனேயே கிகழ்கின்றன. இந்த உண்மையை உலகிற்கு எடுத்துக் காட்டிய பாவ்லோவ் இச்செயலை *1,555850 GI fills in 557&or (Conditioned reflex) storg, பெயரிட்டார். உளவியல் பயில்வோர் இத்தகைய மறிவினைகள் கற்றலுக்குத் துணை செய்கின்றன என்பதை நன்கு அறிவர். X 烹 区 இதற்கு ஒப்பான ஒரு நிகழ்ச்சியை நமது கவிஞர் குறிப்பிடு கின்ருர், கிள்ளியினது யானை போர்மேற் செல்லுகின்றது. அதனைத் தொடர்ந்து பருந்துக் கூட்டங்கள் வருகின்றன ; கழுகு இனங்கள் ஆரவாரிக்கின்றன ; காட்டிலுள்ள நரிகள் நாலாபக்கங்களிலும் அதனைத் தொடர்ந்து ஓடி ஒருவித பரபரப்பை உண்டாக்குகின்றன. இவற்றுடன் பேய்க்கூட்டங்களும் வந்து குழுமுகின்றன ; போர்க்களத் தில் இறந்தவர்களுடைய குடல்களை இழுத்து மாலையாக அணிந்து கொண்டு ஊன் உண்ட மகிழ்ச்சியில்ை பேய்மகளிர் கூத்தாடுகின் றனர். அடிக்கடி யானை போர்மேற் செல்வதனல் இங்கிகழ்ச்சிகளும் அடிக்கடி நடைபெறுகின்றன. கழுகினங்கள் முதலியவற்றிற்கு இஃது ஒரு பழக்கமாகவே ஆய்விடுகின்றது.