பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[65] பேய்களின் விளையாட்கு ஒருவரது வீரத்தையும் வெற்றி மேம்பாட்டையும் புலப்படுத்த வேண்டுமாயின் பகைவர்கள் பட்டொழிந்த போர்க்களச் சிறப்பை எடுத்துரைத்தல்வேண்டும். கேட்பவர் என்றும் கினைவிலிருத்தக்கூடிய சில நிகழ்ச்சிகளை எடுத்துக் காட்டல்வேண்டும். கலிங்கத்துப் பரணி போன்ற போர்பாடும் நூல்களில் இத்தகைய மறக்கமுடியாத நிகழ்ச்சிகள் பல உள்ளன. 烹 X 烹调 சோழன் மகன் போர்மேற் செல்லுகின்ருன் : புலிக்குப் பிறந்தது பூனையாகப் போகுமா ? மணிமுடியணிந்த மன்னரெல்லாம் போரில் இறந்து படுகின்றனர். போரும் முடிவு பெறுகின்றது. இரவு வருகின் றது. ஒரே இருட்டு : பேய்க்கூட்டங்கள் வந்து பிணங்களை வயிருர உண்டு விட்டு விளையாடத்தொடங்குகின்றன. உண்டு வயிறு நிறைந்துவிட்டால் சிலரைப் பொறுத்தமட்டில் உள்ளக் கவலை ஒழிந்து போகின்றதல்லவா? மாண்ட வீரர்களின் மண்டையோட்டினைக் கீறி அகலாகவும், அவர்களின் மூளையின நெய்யாகவும், குடர்களைத் திரியாகவும் கொண்டு விளக்கீடுசெய்து விளையாடுகின்றன. இக் காட்சியினைக் கவிஞர் தம் கற்பனையில் காண்கின்ருர். ஒரு வீரன் மற்ருெரு வீரனுக்குப் படுகளச் சிறப்பினைக் கூறுவதுபோல் பாடல் அவர் கற்பனையில் வடிவம் பெறுகின்றது. இனி, பாடலைக் காண்போம் : முடித்தலை வெள்ளோட்டு மூளைநெய் யாகத் தடித்த குடர்திரியா மாட்டி-யெடுத்தெடுத்துப் பேணய் விளக்கயரும் பெற்றித்தே செம்பியன் சேனய் பொருத களம். (பா - வே.) 15. களத்து.