பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66] { ஊமன் தாலாட்ரு சோழன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்த குறுகில மன்னன் ஒருவன் ஒரு சமயம் சோழனின் ஆணைக்கு அடங்கி கடக்கவில்லை. செம்பியனுக்கு அளவு கடந்த சீற்றம் பிறக்கின்றது; போர் శ్రీశ్రి கின்றது. சோழனது பெரும் படைகள் குறுகில மன்னனின் நகரைத் தாக்குகின்றன. சிற்றரசனும் ஊராரும் சென்ற இடம் தெரியாமல் ஓடிவிடுகின்றனர். மகளிர் யாவரும் ஊருக்குப் புறத்தேயுள்ள சோலே முதலிய இடங்களில் போய் மறைந்து விடுகின்றனர். சூல் கொண்ட மகளிரும் அவர்களுள் பலர். கள்ளிரவில் அவர்களுள் சிலர் கரு வுயிர்க்கின்றனர். அந்தக் குழவிகளை இலச்சருகுகளின் மீது படுக்க வைக்கின்றனர். குழந்தைகளே கத்துகின்றன. அவர்கள் என்ன செய்வார்கள், பாவம் : அச்சத்தினுல் சொல்லாடியோ, தாலாட்டுப் பாட்டுப் பாடியோ அவர்களால் குழவிகளை உறங்கவைக்க முடிய வில்லை. அப்படியே வாய்திறவாது வாளா இருக்கின்றனர். அப் பொழுது கள்ளிரவு; கூகைகள் கூ, கூ வென்று குழறுகின்றன, இவ் வொலி குழந்தைகட்குத் தாலாட்டுவது போலிருக்கின்றது. அந்த ஒலியைக் கேட்டுக்கொண்டே குழந்தைகள் கண்ணயர்கின்றன. இக்காட்சியைக் கவிஞர் சிந்திக்கின்ருர். அவரது சிக்தனை அழகான பாடலாக உருவெடுக்கின்றது. சோழ நாட்டு கங்கை யொருத்தி தன் தோழிக்குக் கூதுவதுபோல் பாடல் வடிவம் பெற்று விடுகின்றது.