பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[67] வெண் கொற்றக் குடையின் சிறப்பு திருப்பதியில் திருவிழாக் காலங்களில் இறைவன் திருவுலாக் காட்சியின்பொழுது இறைவனுக்குக் குடை பிடிப்பர். அதைத் தவிர வேறு இரண்டு பெரிய குடைகளை தனித்தனியாக இருவர் சுமந்து கொண்டு திருவுலாவுக்கு முன்புறமாகச் செல்வர். குடை வெண் பட்டினுல் வேயப்பட்டிருக்கும். குடையின் கைப்பிடியாகிய காம்பு பொன்னில்ை போர்த்தப்பெற்றிருக்கும். குடையின் உச்சியில் தங்கத்தினல் செய்யப்பெற்ற கலசம் ஒன்று பொதியப்பெற்றிருக்கும். விரித்த நிலையில் குடையின் குறுக்களவு கிட்டத்தட்ட ஒன்றரை பாகம் (ஆறு முழம் அல்லது ஒன்பது அடி அளவு) வரையிலும் இருக்கலாம். இந்தக் குடை இறைவனின் அருளாட்சிக்கு ஒரு அடையாளமாகக் கருதப்பெற்று வருகின்றது. இப்பூவுலகிலுள்ள எண்ணற்ற உயிர்கள் அவனது அருள் கீழலில் வாழ்ந்து வருவதற் கும், அவர்கள்மீது அவன் வற்ருத தண்ணளியைச் சுரந்து வருகின் ருன் என்பதற்கும் இந்த வெண் கொற்றக் கொடை அறிகுறியாக அமைந்துள்ளது. வெண்கொற்றக் குடையுடன் வெளி வரும் இறைவனின் திருவுலா ஒரு கண் கொள்ளாக் காட்சியாக அமைந்து அதைக் கண்டோர் அனைவரையும் பக்திப் பெருக்கில் திளைக்கச் செய்யும். அந்தக் காலத்தில் அரசனுக்கும் இத்தகைய வெண் கொற்றக் குடை பிடிப்பது வழக்கமாக இருந்து வந்தது. ஒரு சமயம் கவிஞர் சோழன் வெண்கொற்றக் குடையின்கீழ் வீற்றிருக்கும் காட்சியைக் காண்கின்ருர், அக்காட்சி அவர் உள்ளத்தைக் கவர்கின்றது. உடனே அவரது கற்பனை செயற்படத் தொடங்குகின்றது. மந்தரமலேயே குடை யின் காம்பாக அமைந்திருப்பதாகக் கருதுகின்ருர் கவிஞர். விண்மீன்கள் ஒளிரும் லேவானமே குடைக்குரிய கூடாரமாக அமைந் திருப்பதாக அவருடைய கற்பனையுள்ளம் எண்ணுகின்றது. முழு மதியமே குடையின்மீது பொற்கலசமாக அமைந்திருப்பதாக கினைக்