* [68 பிறந்தநாள் கொண்டாட்டம் சோழன் பிறந்த நாள் இரேவதி. அவனுடைய நகரிலுள்ளவர் கள் அந்த நாளே மிகச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர், மன்னன் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பொங்கல் திருநாளுக்கு வீடுகளைத் துப்புரவு செய்து வெள்ளையடிப்பது போலவும், தெருக்களைச் சுத்தம் செய்து புதுமணல் பரப்புவது போலவும் அரசன் பிறந்தநாட் கொண்டாட்டத்திற்காகவும் தலை நகரைத் தூய்மை செய்கின்றனர் மக்கள். மன்னன் உயிர்த்தே மலர்தலை யுலகம் என்று புறநானூற்றுப் புலவன் கூறியுள்ளான் அல்லவா? அக்காலத்தில் மாநிலம் புரக்கும் மாண்புடைய மன்னஜன. மக்கள் உயிரெனவே கருதியிருந்தனர். பிறந்த நாளை முன்னிட்டுக் கிள்ளி தூயவுள்ளம் படைத்த வருக்குப் பெரிய பெரிய பரிசில்களை வழங்குகின்றன். ஆலய வழி பாடு செய்யும் அந்தணர் ஆவையும் பொன்னேயும் பரிசாகப்பெற்றுச் செல்லுகின்றனர். காவீறு படைத்த புலவர் பெருமக்கள் மக்தர மலையைப்போன்ற களிறுகளைப் பரிசிலாகப் பெற்று அவற்றின்மீது இவர்ந்து தத்தம் வீடு நோக்கிப் போகின்றனர். இக் காட்சிகளே யெல்லாம் மக்கள் கண்டு களிக்கின்றனர். இந்த மாபெரும் திரு நாளன்று-எல்லோரும் இன்புற்றிருக்கும் நேரத்தில்-சிலம்பிகள் தம் கூடுகளை இழந்து தவிப்பதற்கு யாது காரணமோ ?-என்று கழிவிரக்கம் கொள்ளுகின்ருன் ஒருவன். திருவிழாக் காட்சியைக் கண்டான் ஒருவன் கூற்றில் வைத்து அக் காட்சியைத் தம் அழகிய பாடலால் நமக்குக் காட்டுகின்ருர் கவிஞர்.
பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/188
Appearance