பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[70] நீயும் ஒரு பெண்ணு? இTதல் உணர்ச்சி கங்குகரையின்றிக் கடந்து விடுமேயானுல் அவ்வுணர்ச்சிவயப்பட்டவர்களைத் தம்மையும் அறியாமல் ஏதேதோ பேசத்துண்டிவிடும். கங்கையொருத்தி சோழன்மீது காதல் கொள்ளு கின்ருள். காதல் வெறி எல்லே கடந்து சென்று விடுகின்றது. மாலை நேரத்தில் சோழன் உலாவரும் பொழுதெல்லாம் அவன்மீது வைத்த கண் வாங்காது அவனையே பார்த்துக்கொண்டிருப்பாள். கண் ணளவு கொள்ளும் காமம் செம்பாகத்தினும் பெரிதல்லவா? இப்படி எத்தனையோ நாட்கள் அவனைப் பார்த்திருந்தும் அவளது மனம் கிறைவு கொள்ளவில்லை. ஒரு நாள் மாலையில் வழக்கம்போல் வளவன் பிடியானையின்மீது உலா வருகின்றன். அந்த யானை சற்று விரைவாக நடந்து செல்லு கின்றது. அதனுல் வளவளின் எழில் நலத்தை கன்ருகப் பார்க்க முடியாமல் துடிதுடிக்கின்ருள் அக் காரிகை. அதன்மீது சினங் கொண்டு அதனை இவ்வாறு பழித்துக் கூறுகின்ருள்: பிடியே, லேப்பூக்களாலான மாலையை யணிந்த சோழன் கின் மேல் ஏறியிருப்பவும் அவனைச் சிறிதும் பொருட்படுத்தாமல் திடு திடு வென விரைவாக கடந்து செல்கின்றயே. நீ பெண்பால் தானே ! சிறிதளவாவது நாணம் வேண்டாவா? குளத்திலே மலர்க் துள்ள லே மலர்களின் பரப்பினைக் கண்டாற்போன்ற தோற்றமுள்ள கார்மேகங்கள் தவழும் பொழில் சூழ்ந்த காவிரி நாட்டுப் பெண் தன்மை கின்பால் காணப்பெறவில்லையே. தமிழ் நாட்டுப் பெண்கள் கொண்டலையும் ஏவல் கொள்பவர்கள் அவர்கள் பெய்!” என்ருல் மழை பெய்யுமே! அத்தகைய கற்பின் பெருமையை உணராது காண மற்றுச் செல்லும் யுேம் ஒரு பெண்ணு ?" என்கின்ருள். பெண்ணின் ஒருதலைக் காமத்திற்கு வடிவங் தந்த கவிஞரின் சொல்லோவியம் இது: f i