பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[73] ஆறில் ஒன்றுதானே! இiனிதையொருத்தி வளவனைக் காண்கின்ருள். அவன்மீது காதல் கொள்ளுகின்ருள். காதல் வெறியாக முற்றிவிடுகின்றது. இதன் காரணமாக கெஞ்சம் கிலேகுலைந்து போய்விடுகின்றது. அதனுல் காணமும் பறந்து போய்விடுகின்றது. பெண்களுக்குரிய எழிலும் பெயர்ந்து போய்விடுகின்றது. எல்லாம் இழந்தும் அவளுக் குப் பயன் ஒன்றும் விளையவில்லை. தோழி வருகின்ருள். அவளிடம் தனது மனக்குறையைச் சொல்லித் தீர்க்கின்ருள் அழகிய தோழியே, உலகில் அரசர்கள் குடிகளிடமிருந்து கொள்ளும் பொருள் ஆறில் ஒரு கூறுதானே ! அங்ங்ன மிருப்பவும் நமது மன்னன்-காவிரிப் புனல் பாயும் சோணுட்டு வேந்தன்-என்னுடைய கெஞ்சம், நாணம், எழில்நலம்இவை எல்லாவற்றையும் கவர்ந்துகொண்டான். இது என்னே ! முறை செலுத்தும் மன்னனே இங்ங்னம் முறைகேடாக நடந்து கொண்டானே. இஃது அரச நீதிக்கும் புறம்பானதன்ருே ' என் கின்ருள். நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது: என்னெஞ்சு நாணு நலனு மிவையெல்லாம் மன்னன் புனனுடன் வெளவினு-னென்னே பரவக லல்குலா யாறிலொன் றன்ருே புரவலர் கொள்ளும் பொருள். - 3 கவி.85 இன் உ ைகாண்க.