பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 74. முத்தொள்ளாயிர விளக்கம் மங்கையின் மனக் குமுறலுக்கு ஒரு வடிவம் தந்து கவிஞர் புனைந்த சொல்லோவியம் இது: தெண்ணீர் நறுமலர்த்தாச்ச் சென்னி யினவளவன் மண்ணகங் காவலனே யென்பரான்-மண்ணகங் காவலனே யானக்கற் காவானுே மாலைவாய்க் கோவலர் வாய் வைத்த குழல், இது கைக்கிளை தலைவி நெஞ்சொடு கூறுவது. விளக்கம் : தெண்ணீர் நறுமலர்த்தார் தெளிந்த நீர் கிலைகளில் மலர்ந்த செங்கழுர்ேப் ஆக்களே மாலேயாகத் தொடுத்துச் சூடிய, சென்னி இளவளவன் - சென்னி என்று பாராட்டப்பெறுகின்ற இளவரசனுகிய சோழன். வளவன் - சோழன். சென்னி என்பது, சோழர்குடிச் சிறப்புப் பெயர்களுள் ஒன்று. மண்ணகம் - மண்ணுலகம், காவலன் - காக்கின்றவன் , அரசன். கா வானுே - கட்டளை பிறப்பித்துத் தடுக்கமாட்டானே. மாலைக்கண். மாமூலப்பொழுதில். கோவலர் வாய் வைத்த குழல்-ஆயச் சிறுவர்கள் வாயில் வைத்து ஊதுகின்ற புல்லாங்குழலே குழல் என்பது இங்கு குழலின் இசை யைக் குறிக்கும் ஆகுபெயர்ப் பொருளில் வந்தது. உண்மைப் பாங்கும் இரக்கப் பாங்கும் கலந்த பாடல். இவற்றுடன் நகைச்சுவைப் பண்பும் பாட்டின் நிலையை உயர்த்து கின்றது. கவிதையனுபவம் கல்கும் அரிய பாடல் இது. (19)