பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

173 முத்தொள்ளாயிர விளக்கம் உள்ளத்தைத் துன்புறுத்துகின்றது. அகத்தே பெறும் தொல்லை உடலை வருத்துகின்றது. தேரை தேங்காயை உண்ணுமலேயே பழிசுமக்கின்ற தன்ருே? அங்ங்ணமே யானும் வளவனை அணையாமலேயே பழி சுமக் கின்றேன். அடிக்கட்டும், தூற்றட்டும்; அது பற்றிக் கவலை இல்லை. சோழனே அணங்தேன் என்று இருந்தால் போதும் : அ.து இல்லையே! ' என்கின்ருள். நங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல்லோவியம் இது: அன்னையுங் கோல்கொண் டலைக்கு மயலாரு மென்னே யழியுஞ்சொற் சொல்லுவர்-நுண்ணிலேய தெங்குண்ட தேரை படுவழிப் பட்டேன்யான் திண்டேர் வளவன் நிறத்து. இது கைக்கிளை , தலவி தோழிக்கு உரைப்பது. விளக்கம் : அலேக்கும் - அடித்துத் துன்புறுத்துக்கின்ருள். அழியுஞ் சொல் - வருந்தும்படியான அவர் மொழி; பழிச் சொல். நுண்ணிலேய தெங்கு உண்ட நுண்மையான தேங்காயை உண்ட இளநீர்ப் பருவத்தி லேயே தேங்காயைத் தேரை கோய் பற்றும் என்றும், பருப்பு முதிரமுதிர அங் நோய் பருப்பினை அரித்துத் தின்று விடும் என்றும், ஒரு தென்னேயில் தேரை விழத் தொடங்கி விட்டால் அந்த மரம் உள்ளளவும் அது காய்க்கின்ற காய்க ளெல்லாம் தேரையோடிகளாகவே இருக்கும் என்றும் தென்னே வளர்ப்போர் நம்புகின்றனர். துண்மை-சிறுமை. தோை படுவழிப் பட்டேன் யான்.யாதொரு தொடர்பு மில்லாத தேரைக்குப் பழிவந்தது போல, எனக்கும் வந்தது . தேரையார் செவ்விளநீர் உண்ணுர் பழி சுமப்பர் என்புழிப்போல. திண் தேர் வளவன் திறத்து வலிய தேரின்மீது உலா வரும் சோழன் காரண 妊密森。 "தேரைக்குப் பழி தேங்காய் காரணமாக ஏற்பட்டது; அது எனக்குத் தேர்மீது உலாவருவானே சோழன், அந்த மகானுபாவன் காரணமாக ஏற்ப்பட்டது!’ என்பது தலைவியின் குறிப்பு. இந்த அருமையான பாவத்தைப் பாவலர் பாவடிவில் காட்டி விட்டார். பாடலைப் பன்முறைப் படித்துத் துய்க்க வேண்டும். (21) 伞 ক্ষত্রঃ காவலர் சிதம்- - * . - .