பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 2 முத்தொள்ளாயிர விளக்கம் கரையருகில் உராய்ந்து உராய்ந்து விழுகின்ற மீனை மிகுதியாகப் பிடித்துத் தின்னலாம். உனக்கும் பயன் உண்டு. சோழனும் காவிரிக் கரைக்கு நீராட வருவான். அவ்வமயம் என் குறையையும் நீ அவனி டம் கூறுதல் எளிது. செய்வாயா?" என்கின்ருள். காரிகையின் காதல் துடிப்பைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது: - செங்கான் மட நாராய் தென்னுறந்தை சேறியே னின்கான்மேல் வைப்பனென் கையிரண்டும்-நன்பாற் கரையுரிஞ்சி மீன்பிறழுங் காவிரிநீர் நாடற் குறையாயோ யானுற்ற நோய். இது கைக்கிளை , நங்கை நாரையை நோக்கிக் கூறுவது. * விளக்கம் : செங்கால் - சிவந்த கால்களையுடைய, மட நாராய். இளமையான காரையே, தென் உறந்தை சேறியேல் - தென்பாலுள்ள உறை பூருக்குச் செல்வர்யாயின், கின்கால் மேல் வைப்பன் என் கையிரண்டும் . கின் காலத் தொட்டு வணங்குவேன். கன்பால் மருத கிலம் : காவிரி தான் செல்லும் இடத்தை யெல்லாம் கன்பாலாக்கும் என்பது குறிப்பு. கரை உரிஞ்சி மீன் பிறழும் கரையின் மீது உராய்ந்து உராய்ந்து ஏறிய மீன் 'மறுபடியும் நீரில் விழுந்து விடுகின்ற, காவிரிநீர் நாடற்கு - சோழனுக்கு, 'யான் உற்ற நோய் - எனக்கு நேர்ந்துள்ள காதல் நோயை. - காதலுற்ற பெண் தோழியைப் பார்த்துப் பேசினுள் என்று கவிஞர் கூறுவதில் காதல் கடுவேகம் கொள்ளுகின்றது. காதலும் சோகமும் கலந்த பாவம் கவிதையில் கவினுற அமைந்து கிடக் கின்றது. உரையாயோ யான் உற்ற நோய்' என்ற இறுதியடி யைப் பல தடவைப் பாடிப் பார்த்தால் இது வெளிப்படுவது தெளி வாகும். நாயன்மார் ஆழ்வாராதிகளின் பாடல்களிலும், கலம்பகம் தூது போன்ற பிரபந்தங்களிலும் இத்தகைய தூதுப் பாடல்களைக் காணலாம். - (23) உயிர் இல்லாத பொருளே உயிர் உள்ளன போலவும், உணர்வு இல்ல்ாத பொருள்கள்ை ஆணர்வு உடையனபோலவும், பேசாதவற்றைப் பேசுவனபோலவும் கவிஞர்கள் அமைத் தில்த் த்ொல்காப்பியரும் குறிப்பிடுகின்ருர் (தொல் பொருள் . பொருளியல் நூற். 2). இது பிற்காலத் துது இலக்கியங்கட்குக் கருவாக அமைந்தது. - -