பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[31] - அன்னையின் அன்பு இவ்வளவுதானு? சின்னஞ் சிறுவயதில், மகளிர் மழலைச் சொற்களால் பெற் ருேர்களை மகிழ்வூட்டி வரும் பருவத்தில், தாய்மார் அவர்களிடம் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுவர். விளையாட்டாக எத்தனையோ செய்தி களைப் பேசிக் களிப்பர். அப் பருவத்தில் தாய்மாரோ பாட்டிமாரோ அவர்களிடம் பேசுவது வியப்பாகவும் வேடிக்கையாகவும் இருக்கும். ஓர் இளவரசரின் படத்தைக் காட்டி, 'கண்மணியே, இந்த ராஜாவை உனக்குக் கட்டி வைப்போமோ ?” என்று பாட்டியோ அன்னையோ கேட்பதை நாம் அறிவோம். குழந்தையும் அமிழ்தத்தையும் வெல்லும் மழலை மொழியில் ஊ . . . ம் என்று அதற்குப் பொருளறியாமல் ஒப்புக்கொள்ளும், இந்த விதமான வேடிக்கைச் செயல்கள் சதா நடந்து கொண்டே இருக்கும். இதில் அன்னைமார்கட்குச் சிறியதள வேனும் சலிப்பே இருப்பதில்லை. இவையாவும் குழந்தையின் அறியாப் பருவத்தில் கிகழும் வேடிக்கை நிகழ்ச்சிகளாகும். X 芯 凌 ஒரு சமயம் கோழிக் கோமான் உலா வந்து கொண்டிருப்பதை மங்கை யொருத்தி காண்கின்ருள் அவன்மீது மால் கொள்ளுகின் ருள். சதா அவனையே நினைந்து கினைந்து உள்ளம் உருகி நிற்கின்ருள். ஊணும் உறக்கமும் சரியாக இல்லாததால் அவளது உடலில் பெரு மாற்றம் காணப்படுகின்றது. அவளுடைய அன்னை தன் மகளின் நிலையைக் கண்ணுறுகின்ருள்; கவலை கொள்ளுகின்ருள். உடனே அவள் மகளிடம் வந்து இனிமேல் நீ வீட்டை விட்டு வெளியே தலை நீட்டக் கூடாது' என்று கடுமையான எச்சரிக்கை தருகின்ருள். என்ன செய்வாள் மகள் : மிக்க ஆற்ருமையால் அவள் இவ்வாறு தன் நெஞ்சுடன் சொல்லிக் கொள்ளுகின்ருள். 'நெஞ்சமே, யான் மழலைமொழி பேசும் பருவத்தில் உறந்தையர் கோனக் கனவளுகப் பெறுவாயாக!' என்று சொன்னுள் அன்ன. அப்படிச் சொன்னதெல்லாம்போய் இப்பொழுது, அவனைப்பாராதே;