பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 34. முத்தொள்ளாயிர விளக்கம் நினைக்கவும் செய்யாதே; மறந்துவிடு என்றெல்லாம் சொல்லு கின்ருளே. இஃது என்ன ஆச்சரியம்? பாலை கிலத்தில் உள்ள கானல் நீர் விலங்கினங்கட்குத் தண்ணீர்போல் காட்சி அளித்து அவை தன்னை நோக்கி வருங்கால் வெட்ட வெளியாகத் தோன்றி மயக்கின கிலையைப்போல் அல்லவா இருக்கின்றது இவளது செயல் ? என்னே அன்னையின் அன்புடைமை !' என்கின்ருள். மங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொல் லோவியம் இது: - குதலைப் பருவத்தே கோழிக்கோ மானே வதுவை பெறுகென்ரு என்னை-யதுபோய்த் விளைந்தவா வின்று வியன்கானல் வெண்டேர்த் துளங்குநீர் மாமருட்டி யற்று. இது கைக்கிளை; தலைவி நெஞ்சொடு சொல்லுவது. விளக்கம் : குதலைப் பருவம் - மழலைச்சொற்கள் பேசும் பருவம் , இள மைப் பருவம். கோழிக் கோமான் . உறையூர் மன்னகுகிய சோழன். வதுவை - திருமணம். அதுபோய் - அப்படியெல்லாம் சொல்லும் கிலை மாறி. விளைந்தவா இன்று . இப்பொழுது சோழனைக் கண்ணுல் காணவும் கூடாது என்று சொல்லும்படியான தன்மையுடையவளாக மாறின. கிலேமை. வியன் கானல் வெண் தேர் துளங்கு நீர் - அகன்ற பாலைவனத்தில் ஒளியாக அசை கின்ற கானல் நீர், வெண் தேர் - பேய்த் தேர்; கானல் நீர், துளங்கு நீர் - அலையடிப்பதாகத் தோன்றும் நீர்ப்பரப்பு. மா மருட்டியற்று மான் முதலிய விலங்குகளை ஏமாற்றியது போன்றது. மா - விலங்கு. அறியாப் பருவத்தில் நடைபெறும் பொருளில்லாத விளையாட்டு காதலுடன் பிணைந்து அரியதோர் உணர்ச்சி பாவத்துடன் மிளிர் கின்றது இப்பாடலில். பாடலைப் பன்முறை இசையூட்டிப் பாடினல் இப் பாவம் தட்டுப்படுவதை அறியலாம். (26) (பா வே. 14. மான்மருட்டி,