பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[83] கனவிலும் ஏமாற்றமா? கோழியர்கோன்மீது காதல் கொள்ளுகின்ருள் கோதை பொருத்தி. காதல் வளர்கின்றது. சோழனேயே கினைந்து கினைந்து அவள் நெஞ்சழிகின்ருள். ஒருநாள் உறங்கினவள் திடுக்கிட்டெழு கின்ருள். சோழன் தன்னைத் தழுவ வருவதுபோன்றும், தான் இணங்களது ஊடுவதுபோன்றும் கண்ட கனவு அவளை எழுப்பி விடுகின்றது. சோழன் கூடுவதற்குத் தன்னை நெருங்கி வருங்கால் உறக்கம் கெட்டழிகின்றது. அதற்குமேல் விடியும் வரையில் அவ ளுக்குத் உறக்கமே வரவில்லை. காலையில் தலைவியைப் பார்க்கத் தோழி வருகின்ருள். தலைவி யின் வட்டத்தைக் கண்டு அதற்குக் காரணம் வினவுகின்ருள். அதற்குத் தலைவி இவ்வாறு மறுமொழி பகர்கின்ருள் : 'தோழியே, கீ வருவதற்குச் சில மணி நேரத்திற்கு முன்னர் கனவொன்று கண்டேன். வானுேங்கி வளர்ந்துள்ள தென்னம் பாளையில் பொருந்திய தேனடைகளையும் நீர் வளத்தையுமுடைய சோழ நாட்டின் இளமையோடு கூடிய மன்னன் நான் உறங்கிக் கொண்டிருந்தபொழுது என்னை மருவ வருவதாகக் கனவு கண்டேன். அப்பொழுது யான் ஊடினேன். அந்த ஊடலும் ஓர் அளவுடன் கில்லாது எல்லையின்றி விரிந்தது. அதற்குள் விழிப்பு வந்துவிட்டது. கூடும் வாய்ப்பு பெறவில்லை. இந்த ஊடல் என்ற ஒன்று வந்து தோன்றிக் காரியத்தையே கெடுத்துவிட்டது. இப்பொழுது தவித்து கிற்கின்றேன். என்செய்வேன்? ' என்கின்ருள். இங்ஙனம் தவிக்கும் கிலேயிலுள்ள கங்கையின் மனநிலையைக் காட்டும் கவிஞரின் சொற்படம் இது : ஊட லெனவொன்று தோன்றி யலருறுஉங் கூட லிழந்தேன் கொடியன்னுய்-நீடெங்கின் பாளையிற் றேன்ருெடுக்கும் பாய்புன னிர்நாட்டுக் காளையைக் கண்படையுட் பெற்று. இது கைக்கிளே தலைவி தோழியிடம் உரைப்பது. {tés - s} 12. ធ្នាំ មុំ A ... 懿