பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$88 முத்தொள்ளாயிர விளக்கம் விளக்கம் ஊடல் - கணவன் மனைவியரிடையே தோன்றும் சிறு பிணக்கு. அலர் உறுஉம் அஃது அளவின்றி விரிந்தால். ஊடல் அலர்த லாவது, உப்பமைந்ததுபோல் ஓரளவுடன் கில்லாமல் அளவின்றிப் பரத்தல், கூடல் . கூடலை முயங்கலே, கொடியன்னுய் - பூங்கொடியை யொத்த தோழியே. கீல் தெங்கின் பாளையில் தேன் தொடுக்கும் . நீண்ட தென்னேயின் பாளையில் தேனீக்கள் தேனடைகளைத் தொடுத்து வைக்கின்ற, பாய்புனல் நீர் காட்டுக் காளேயை நீர் பாய்கின்ற புனல் நாடாகிய சோளுட்டை ஆளு கின்ற காளைப் பருவமுள்ள சோழனே. கண்படையுள் பெற்று - உறக்கத்தில் தோன்றிய கனவில் கண்டு, கண்படை உறக்கம். கனவில் வந்து கிட்டாமல் போனதையே ஓர் இழப்பாகக் கருதி ஆற்ருது இருக்கும் கங்கைக்கு கனவில் இத்தகைய நிகழ்ச்சி நேரிட் டால் எத்தகைய ஏமாற்றமும் துயரும் ஏற்படும் என்பது கவிஞர் பெறவைக்கும் குறிப்பு. (26)