பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முத்தொள்ளாயிர விளககம் நானுெருபால் வாங்க நலனுெருபா லுண்னெகிழ்ப்பக் காமருதோட் கிள்ளிக்கென் கண்கவற்ற-யாமத் திருதலைக் கொள்ளியி னுள்ளெறும்பு போலத் திரிதரும் பேருமென் னெஞ்சு. இது கைக்கிளை; தலைவி தன் நெஞ்சுடன் கவில்வது. விளக்கம்: நாண் ஒரு பால் வாங்க-காணம் ஒரு பக்கத்திற்கு இழுக்க, வாங்க இழுக்க, கலன் ஒருபால் உள் நெகிழ்ப்ப - காதல் கலன் ஒருபக்கம் மனத்தை இளக்கிவிட, காமரு தோள் கிள்ளிக்கு அழ கிய தோள்களையுடைய கிள்ளியின் காரணமாக. கண்கவற்ற - கண் மனத தில் கவலையை யுண்டாக்க (கவல் - பகுதி). இருதலைக் கொள்ளியின் உள் ளெறும்புபோல - இரண்டு பக்கமும் கெருப்பு பற்றிக்கொண்டு எரியும் மூங்கிற் குழாய்க்குள் அகப்பட்ட எறும்புபோல, யாமத்து கள்ளிரவில். என் நெஞ்சு என் மனம், திரிதரும் பேரும் சோழனைக் காணச் செல்லும், மீண்டும் திரும்பும், இவ்வாறு அல்யும். 'திரிதரும் பேரும் என் நெஞ்சு - என்ற இறுதி யடியைத் திரும்பத் திரும்பப் பாடில்ை தலைவியின் நெஞ்சத் துடிப்பு நமக்குத் தட்டுப்படும்; அதலை நம் உள்ளமும் கனிந்து குழையும். (27)