பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i 871 வாடையே, ஒடிப்போய்விரு நிலங்கிள்ளி உறையூரை அரசோச்சிய காலத்தில் கங்கை யொருத்தி புகார் நகரிலிருந்து யாதோ ஓர் அலுவல் கிமித்தம் உறையூர் வர நேர்கின்றது. வழியில் தாமரை, குவளை மலர்கள் அழகாக மலர்ந்திருப்பதையும் வண்டுகள் அவற்றில் தேன் அருந்திக் கொண்டிருப்பதையும் காண்கின்ருள். தலைநகரில் சோழன் உலா வருவதைப் பார்க்கின்ருள்; அவனது கையிலுள்ள அச்சந்தரும் வேலைக் காண்கின்ருள். சோழனின் பெருமிதத் தோற்றம் அவளது உள்ளத்தைக் கவர்கின்றது. அவன்மீது காதல் கொள்ளுகின்ருல் : காதல் கருக்கொண்டு வளர்கின்றது. சில நாட்கள் கழிகின்றன. ஒருநாள் உறந்தையர்கோன் இவள் வாழும் பட்டினத்திற்கு அரசு அலுவலின் கிமித்தம் வந்துபோனதைக் கேள்விப்படுகின்ருள் நங்கை. இதனுல் இப்பட்டினமும் அவனது ஆட்சிக்குட்பட்டது என்பதை அறிகின்ருள். அன்று இரவு அவள் சோழனைப் பற்றிய நினைவில்ை உறக்கமின்றி இருக்கின்ருள். இச் சமயத்தில் ஒரு வண்டு ஒலித்துக்கொண்டு அவள் இருந்த அறைக்கு வந்து உலவிச் செல்லுகின்றது. வண்டினை அரசன் விட்ட தூதாகவே கருதுகின்ருள். வண்டு போன பிறகு வாடை வருகின்றது அது எலும்பைத் துளைக்கும் அளவுக்குக் கடுமையாக வீசுகின்றது. அவளால் அதன் வேகத்தைத் தாங்கமுடியவில்லை. உடனே வாடையை நோக்கி இவ்வாறு பேசுகின்ருள்:

  • பனி வாடையே, இனிமேல் இப்பக்கம் எட்டிப்பார்க்காதே. இதற்கு முன்னர் இப்பட்டினம் காவலின்றி இருந்தது. நீ விருப்பப்படி உள்நுழைந்து எம்போன்ற மகளிரை வருத்தினய், இப்பொழுது நகர் கிள்ளியின் காவலில் இருக்கின்றது. அவன் வந்தால் உன்னை அழித்திடுவான். அவனது கையில் அஞ்சத்தக்க வேலும் உள்ளது. அவன் வருவதாகத் தூது அனுப்பிய வண்டும் இப்பொழுதுதான் வந்து போயிற்று, பகலே வந்திருக்கவேண்டிய வழியில் செங்கமலம், செங்கழுநீர்ப் பூக்களில் பொழுதைப் போக்கி இப்பொழுதுதான் வந்தது. ஒடு, கில்லாதே; போ' என்கின்ருள்.