பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 முத்தொள்ளாயிர விளக்கம் பறவை இனங்கள் அஞ்சுகின்றன; சுற்றுப்புறப் புதர்களில் மறை கின்றன. தம்முடைய குஞ்சுகளையும் தம்முடைய சிறகினுள் ஒடுக் கிக்கொள்ளுகின்றன.” தான் ஏதோ ஒன்றைக் கண்டுபிடித்துவிட்டதாகத் தோழி பெரு மிதங் கொள்ளுகின்ருள். சேரநாட்டின் இயற்கைவளத்தைக் கண்டு அதில் திளைத்த கவிஞர் அதைப் பாராட்ட நினைக்கின்ருர் தம்முடைய கருத்தைத் தலவி-தோழியர் பேச்சாக அமைத்துத் தமது கற்பனை கலம் தோன்ற அழகிய பாடலாக அமைத்திருக்கின்ருர். அப்பாடல் இது : அள்ளாற் பழனத் தரக்காம்பல் வாயவிழ வெள்ளந்திப் பட்ட தெனவெரீஇப்-புள்ளினந்தன் கைச்சிறகாற் பார்ப்பெடுக்குக் கவ்வை யுடைத்தரோ நச்சிலேவேற் கோக்கோதை நாடு. இது சேர நாட்டின் செவ்வி கூறுவது. விளக்கம் அள்ளல் சேறு, பழகம். நீர்ப்பொய்கை, அரக்காம்பல் . சிவந்த நிறமுடைய ஆம்பற்பூக்கள். வாய் அவிழ - மெள்ள மெள்ள இதழ் விரிய, வெள்ளம் - நீர், தீப்பட்டது என வெரீஇ - தீப்பற்றிக்கொண்ட்த் என்று பயந்து, புள் இனம் (நீர் வாழ்) ப ற ைவ யி ன ங்க ள், கைச் சிறகிால் - கை போன்ற இறக்கைகளால், பார்ப்பு - இளங் குஞ்சுகளை ப்ார்ப்பும் பிள்ளேயும் பறப்பவற் றினமை என்பது தொல்காப்பியம். கவ்வை அச்சத்துடன் கூடிய ஆரவாரம், உடைத்தரோ - உண்டு. அரோ என்பது அசை. நச்சிலை வேல் - கஞ்சுபோல் அச்சத்தை விளைவிக்கும் இல வடிவம் போன்ற வேலேயேந்திய கோக்கோதை - சேரமன்னன். வெள்ளத்தில் அரக்காம்பலாகிய தீப்பிடித்துள்ளது என்று கூறுவது தற்குறிப்பேற்றம்' நாட்டில் பயப்படவேண்டிய செயல் ஒன்றும் இல்லை என்பது உண்மைதான். ஆயினும், இந்தப் புள்ளினங்கள் அஞ்சித் தவிக் கின்றனவே-என்ற நகைச்சுவையுடன் கூடிய தோழியின் கூற்றில் சேரநாட்டுச் சிறப்பு புலனுகின்றது : நாட்டு வளமும் வேலின் கொற்றமும் காட்டப்பெறுகின்றன. (?) {ய வுே.) 4. வாய் கெகிழ. 8. புள்ளினங்கள். க தொல் பொருள் மரபியல் நூற் 4.