பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 முத்தொள்ளாயிர விளக்கம் களிகள் களிகட்கு நீட்டத்தங் கையாற் களிகள் விதிர்த்திட்ட வெங்கட்-டுளிகலந் தோங்கெழில் யானை மிதிப்பச்சே ருகுமே பூம்பொழில் வஞ்சி யகம். இது வஞ்சி நகரின் வளம் இயம்புவது. விளக்கம் : களிகள் - கள்ளைப் பருகும் மறவர். களிகட்கு - எனைய மறவர் கட்கு. நீட்ட வழக்கப்படி மதுக் கிண்ணத்தை நீட்ட, தம் கையால் களி கள் விதிர்த்திட்ட தமது கைகளில்ை தொட்டு கிலத்தில் தெளித்த, வெம்கள் துளிகலந்து - விருப்பந்தரும் கள்ளின் எண்ணிறந்த துளிகள் யாவும் சேர்ந்து. வெம்மை வேண்டல் (தொல்காப்பியம்), ஒங்கு எழில் யானை மிதிப் (மறவர்கள் போனபிறகு) யான கிரைகள் மிதிப்பதல்ை. சேரு யிற்றே வஞ்சி அகம் - சேருகப்போய்விட்டது சேரனது வஞ்சிமா நகரம். இதனுல் மறவர்களின் தொகை அறியப்படும். பூம்புனல் நீர்வளம் பொருங் திய, வஞ்சி - தற்காலத்துக் கொச்சி. இன்றும் கொச்சியில் தோணியை " வஞ்சி என்று வழங்குகின்றனர். வஞ்சி வளங்கொண்ட தீவுகளாய் நகரம் அமைந்ததுபற்றி வஞ்சி மாநகர் என்று பெயர் அமைந்தது போலும் ! வெங்கள் துளி கலந்து, யானே மிதிப்பச் சேருன இடம் எது? அதுதான் பூம்புனல் வஞ்சி அகம் இதில் முத்தாய்ப்பு வைத்த மாதிரி வியப்புச் சுவை தொனிக்கின்றது. (2) (பா - வே. 6. விதித்திட்ட 8. டளிகலக் 12 - 13. ருயிற்றெம் பூம்பொழில்