பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[90 வில்லெழுதி உய்வீர்களாக! சேரனது ஆட்சி செம்மையுற நடைபெறுகின்றது. மக்கள் அமைதியாக வாழ்கின்றனர், இங்கிலேயில் சிறுமதியுள்ள சிற்றரசர் கள் சிலர் ஒன்றுகூடி திறை கொடாமலிருந்து விடுகின்றனர், சீற்றங்கொள்ளுகின்ருன் சேரன். தண்டெடுத்துச் சென்று அந்தக் குறுகில மன்னர்களின் அகந்தையை அடக்கி வருமாறு தானத் தலைவனை அனுப்புகின்ருன். அது போர்க்களம். இருபக்கத்துப் படைகளும் சக்திக்கின்றன. இன்னும் போர் தொடங்கவில்லை. தானேத் தலைவகுே ஆண்மை யுடன் அறிவும் மிக்கவன். போர் தொடங்கிளுல் பகைவர்களின் யானைப் படைகளும் பல நாட்கள் முயன்று பலமாகக் கட்டிய வள மதில்களும் வீணுக அழிந்துவிடுமே என்று இரக்கப்படுகின்ருன் , ஒன்னுரையும் உவந்தாராக்கிக்கொள்ள முயல்கின்ருன். பகை மன் னர்கட்கு அறிவுகொளுத்தலாம் என்று எண்ணி அவர்களை நோக்கி இவ்வாறு பேசுகின்ருன்: 'யானைப் படைகளையுடைய வேந்தர்களே, நீங்கள் யானைப் படைகளுடன் வந்தாலும் பயனில்லை. அவை போன இடம்கூடத் தெரியாமல் போய்விடும். வளப்பமாக அமைந்த தும் கோட்டைகளும் துவக்குத் துணை நிற்கா. அதோ விண்ணில் காணுங்கள் வான வில்லை! வானவர்களும் எம் மன்னனுக்கு அடங்காமல் வாழ இயலாது. அதனுல்தான் அவர்கள் வானகத்தில் வில்லெழுதி எங்கட்கு அடங்கி அமைதியாக வாழ்கின்றனர். அதனை நோக்கி யேனும் உய்யும் வழியை அறிந்துகொள்ளக் கூடாதா ? வழக்கப்படி திறையைச் செலுத்திவிடுங்கள் ! நீங்கள் எங்கள் மன்னனுக்குப் பணிந்ததற்கு அடையாளமாக உங்கள் கோட்டை மதில்களில் ஓவி யரைக்கொண்டு வில் எழுதிவிடுங்கள் இதுவே உய்யும் வழி. இப்படிச் செய்துவிட்டால் உங்கட்கு விபத்து என்றும் நேரிடாது ' என்கின்ருன்.