பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[91 l சீற்றந் தணியாத யானை சேரனது படைகட்கும் மாற்றரசர்களின் படைகட்கும் போர் கிகழ்கின்றது. வேழமுடைய மலைநாட்டுச் சேரனின் படையில் பெரும் பகுதி யானைப்படையாக உள்ளது. போர் நடக்கும்பொழுது வீரர்கள் யானைகட்குக் கள்ளை அதிகமாக ஊட்டி அவற்றை வெறிகொள்ளச் செய்து போர்க்களத்திற்கு அனுப்புவது வழக்கம். பகையரசன் இருக்கும் இடத்தை அவனுடைய வெண்கொற்றக் குடை குறிப்பிடும். சோனது யானையொன்று மிக்க வெறிகொண்டு பகைவர்களின் படைகளை யெல்லாம் தாக்கித் தேய்க்கின்றது: மிதித்து நாசமாக்குகின்றது. இறுதியில் பகையரசனின் குடை யருகில் சென்று அதைப் பிடுங்கித் தரையில் அடித்துச் சுக்குநூருக நொறுக்குகின்றது. அடிக்கடி இங்ஙனம் குடைகளை கொறுக்கி நொறுக்கி யானைக்கு இது ஒரு பழக்கமாகவே போய்விடுகின்றது. பகலெல்லாம் இவ்வாறு போர் நடைபெறுகின்றது; மாலையும் நெருங்கிவருகின்றது. யானைக்குச் சினக்தணிந்தபாடில்லை. மாலையில் போர் கின்று ஓய்ந்த பிறகும் சினவெங்களி யானையின் செயல் அடங்கவில்லை. அப்பொழுது வானத்தில் முழுமதியம் ஒளிர் கின்றது. அந்த வான்திங்களை கோக்குகின்றது யானே. விண்ணில் விளையாடும் பொன்னிலவையும் மாற்றரசனது வெண்கொற்றக் கொடையெனக் கருதி அதனையும் பற்றிச் சிதற அடிக்க எண்ணு கின்றது. அதனைப் பற்றுவதற்கும் தன் கையை நீட்டுகின்றது. இந்தக் காட்சியைச் சேரனது தானத்தலைவன் தன் நண்பன் ஒருவனுக்குக் கூறுவதுபோல் கவிஞரது பாடல் அமைகின்றது.