பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[92] செருக்கணக் காட்சி போர் முடிந்தபிறகு போர்க்களத்தில் காணப்பெறும் காட்சிகள் ஒவ்வொன்றும் அச்சத்தை விளைவிக்கும்; அருவருப்பையும் தரும். ஆயினும், போர் வெறியில்-வெற்றியடைந்த களிப்பில்-அவை அனுபவிக்கத் தக்கனவாகவே இருக்கும். ஆறுகள் போல் இரத்தம் பெருக்கெடுத்து ஓடுவதும், அதில் பிணங்கள் குறுக்கிட்டுத் தடை யாகக் கிடப்பதும், அறுபட்ட கையும் காலும், உடல்வேறு தலை வேருகக் கிடக்கும் கிலேயும், இன்ஞோன்ன பிறவும் வெற்றியடைந் தோருக்கு மகிழ்ச்சியைத் தந்தாலும் நமக்கு அருவருப்பையே உண்டாக்கும். ஆனால், கவிஞன் இத்தகைய காட்சிகளைக் கவிதை களில் தரும்பொழுது அவை மேக்குச் சுவையைத் தருகின்றன ; நமது உள்ளத்தைப் பூரிக்கவும் செய்கின்றன. இதுவே சுவை யியலின் தத்துவம். இத்தகைய அருவருப்புச் சுவையைத்-பீயத்ஸ் ரஸ்ம்-தரும் காட்சிகளைக் கலிங்கத்துப் பரணியில்தான் கண்டு அனுபவிக்கவேண்டும். X 玄 忒 சேரனது செருக்களத்தில் ஒரு காட்சி. சேரன்மீது பொருமை கொண்டு எதிர்த்த சிறுமதி மன்னர்கள் பலர் தம் படைகளுடன் பொருது மடிகின்றனர். பலர் மார்பில் அம்பு தைத்த கிலேயுடன் வீழ்ந்து கிடக்கின்றனர். அவர்களுடைய கைகள் இருபக்கமும் நீண்டநிலையில் மண்ணில் கிடக்கின்றன. கழுத்தில் பச்சைக் கல்லாலான கண்டி கிடக்கின்றது. தோள்களில் பருத்த பொன் வளையங்கள் மின்னுகின்றன. முன் கைகளில் கனத்த வயிரக் கடகங்கள் கிடந்து விளங்குகின்றன. இறந்து கிடக்கும் இப்பினங் களைத் தின்பதற்கு கரிக்கூட்டங்கள் வருகின்றன. அவற்றுள் ஒரு சிறு நரிக்குட்டி வயிரக் கடகமிட்ட கையைக் கடித்து இழுக்கின்றது. வயிரம் வாயைக் கிழித்துவிடுகின்றது. தோள்வளையமும் கழன்று கீழே நழுவிவந்து கரியின் தலையில் வேகமாக மோதி புண்படச்