பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 முத்தொள்ளாயிர விளக்கம் செய்கின்றது. வாயிலும் தலையிலும் புண்ணுற்றுக் குருதியொழுகிய கிலையில் அது வலி பொறுக்கமாட்ட்ாமல் கதறித் தாய் கரியைக் கூவியழைக்கின்றது. இப்படிப் பல இடங்களில் நடைபெறு கின்றன. எங்கும் கரிக்குட்டிகள் ஊளையிடும் இரைச்சல்தான். இக் காட்சியைச் சேரனது படைவீரன் ஒருவன் தன் கண்ட னுக்குக் கூறுகின்றன். இக்காட்சியைக் காட்டும் கவிஞரது சொல்லோவியம் இது : மரகதப்பூண் மன்னவர் தோள்வளை கீழா வயிரக் கடகக்கை வாங்கித்-து பருழந்து புண்ணுற் றழைக்குங் குறுநரித்தே பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் களம். இது சேரன் பொருத செருக்களம் செப்புவது. வினக்கம்: மரகதப்பூண் - பச்சைக் கல்லாலாகிய கழுத்திலணியும் கண்டி, தோள்வளை - தோளிலணியப்படும் பொன்வளையம். கீழே கீழாக, வயிரக் கடகக் கைவாங்கி வயிரம் பதித்த கடகமிட்ட கையைக் கடித்து இழுத்து. வாங்குதல் இழுத்தல், கையை வேகமாகக் கடித்து இழுக்கும் பொழுது மரகதப் பூண் மார்பில் அணிந்த மன்னர்களது தோளில் அணியப் பெற்றுள்ள தோள்வளையம் கீழே கழன்று விழுகின்றது. துயருழந்து - துன்ப மடிைந்து, புண்ணுற்று அழைக்கும் - புண்பட்ட காரணமாகத் தாய் கரியை கினைத்து ஊளையிடும். குறு கரித்தே-பல சிறு கரிகள் இவ்வாறு துயருழந்தன. பூழியனைக் கண்ணுற்று வீழ்ந்தார் . சேரனப் போரில் எதிர்ப்பட்டனர், அவ் வளவுதான் ; மார்பில் அம்பு தைத்து மண்ணக் கவ்வினர். பூழியன் - பூழி நாட்டையுடைய சேரன். பூழியர்கோக்கோதை (பாடல்-100) என்று வருதலுங்காண்க. களம் - இப்படியாகப் பலா வீழ்ந்து மாண்டு கிடந்தபோர்க் களம் என்றவாறு, அச்சத்துடன் அருவருப்பும் கூடிய பாவத்தைப் பாடலில் காணலாம். (5) (பா வே.). 4. கீளா.