பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[93] போரினல் ஏற்பரும் அழிவு அமைதியான காலத்தில் ஒரு நாடு ஏரிகளிலுைம், அணைகட்டிய ஆற்றுப் பாய்ச்சலாலும், பிற நீர்ப்பாசனத் திட்டங்களாலும் வளம் பெற்றிருக்கும் : கஞ்சை வயல்களும், பழமரத்தோப்புக்களும் செறிந்து காணப்பெறும். உழவர்கள் பண்ணையைப் பண்படுத்திப் பாங்குற வைத்திருப்பர். இத்தகைய நாட்டில் போர் நிகழ்ந்தால், பகைவர்கள் ஏரிகளை உடைப்பர் ; அணைகளை அழிப்பர் : பாலங்களைச் சிதைப்பர் : மக்களையும் பலவிதமாக அலைக்கழித்து எங்கும் தங்கமுடியாத பீதியை நிலவச்செய்துவிடுவர். நாளடைவில் நாடும் பாழாகும் பாலைவன மாகவும் மாறிவிடும். இஃது எக்காலத்திலும் கடைபெறுவது. 烹调 烹调 荔 திறைகொடாது சிறுமதிக் குறுகில மன்னர்கள் சேரன எதிர்த்துத் தோற்று அழிகின்றனர். சேரனது கொடி அந்நாடுகளில் பறக்கத்தான் செய்கின்றது. ஆயினும், பயன் என்ன? எழுநிலை மாடங் கால்சாய்த் துக்குக் கழுதை மேய்பா ழாயினு மாகும்’ ’ என்றவாறு நாடு முழுவதும் பாழாகின்றது; காடு இடுகாட்டினும் பாழாக மாறிவிடுகின்றது. பூஞ்சோலை புழுதி மேடாகிவிடுகின்றது ; வளமான நாடு வறண்ட பாலைகிலமாகின்றது. பகையரசர்கள் வீணுகச் சேரனது சீற்றத்திற்கு ஆளாகிப் பாழ்படுகின்றனர். இக் கொடுமையான காட்சிகளைக் காண்கின்ருர் கவிஞர் , கண்ணிர் பொழிகின்ருர். கோதையைக் காண்கின்ருர், அவனது வீரத்தைப்பற்றிப் பேசுவதற்கு இதனை வாய்ப்பாகவும் கொள்ளு கின்ருர் : 'கின்னுடைய மதயானைப் படைகளையும் பொருட்படுத்தாது, பகையைக் கொல்லும் கினது திண்டோள்களையும் மதியாது நினக்குச்

  • கறுந்தொகை -5%

i 4. -