பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芝鲁 முததொள்ளாயிர விளக்கம் சினமூட்டிய காட்டின் கிலே மிகக் கேவலமாகிவிட்டது. புரப்பார் இன்மையினுல் பூம்பொழில்கள் அழிந்து பாழாயின. வெயிலின் வெப்பங் தாங்காது செடிகளனைத்தும் கருகிப்போய்க் கிடக்கின்றன. அச் செடிகளிருந்த இடங்களிலெல்லாம் முட்கள் கிறைந்த கண்டங் கத்திரிச் செடிகள் மலிந்து காணப்பெறுகின்றன. எங்குப் பார்த் தாலும் குறுநரிக் கூட்டங்கள் அங்கு மிங்குமாக கடமாடுகின்றன. நாளடைவில் முள்ளிச்செடிகளும் கரிந்து தீய்ந்துபோய்வருகின்றன.' என்கின்ருர், இக் காட்சியைக் காட்டும் கவிஞரது சொல்லோவியம் இது: கரிபரந் தெங்குங் கடுமுள்ளி பம்பி தரிபரந்து நாற்றிசையுங் கூடி-யெரிபரந்த பைங்கண்மால் யானைப் பகையடுதோட் கோதையைச் செங்கண் சிவப்பித்தார் நாடு. இது பகைப்புலம் பழித்தல்; சேரனது சீற்றத்தைக் கிளப்பி விட்டவர் காட்டின் கிலேயைக் கூறுவது. விளக்கம் : கரிபரந்து நெருப்பு பற்றி எரிந்ததால் எங்கும் கரிமய மாகி, இது தீக்கொளுத்தின உடனே கிகழ்வது. கடுமுள்ளி பம்பி - முள்ளிச் செடிகள் (கண்டங் கத்திரிச் செடிகள்) கிறைந்து. இஃது எதிர்காலத்தில் நிகழ்வது. கரி பரந்து - நரிகள் இங்குமங்குமாக உலவி. நரிகள் கூடுவது இறந்தவருடைய ஊன உண்டற்கு நிகழ்வது. இது போர் நடை பெற்று முடிந்தவுடன் கிகழும் ; அதன்பின்னர் அக் களம் கரி வாழும் இடமாகவும் மாறிவிடும். கால் திசையும் எரி பரந்த - முள்ளிச்செடிகளும் நாளடைவில் கரிந்து தீய்ந்து காணப்பெறுகின்றன. பைங்கண்மால் யானை . பசிய கண் களையும் மதத்தையும் கொண்ட யானே. பகையடுதோள் - பகைவர்களை ஒடுக்கவல்ல திண்தோளையுடைய, செங்கண் சிவப்பித்தார் காடு - செக் தாமரைக் கண்ணக் கோவைப்பழம் போலச் சிவக்கும்படிச் சினமூட்டிய பகைவரது காடு. பாட்டைப் பலமுறைப் பாடி அனுபவித்தால் பாழ்பட்ட நாட்டின் காட்சி மனத்திரையில் விழுவதைக் காணலாம். (6)