பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/243

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[95] மீன்சேர் மதியனயான் விற்கொடி கட்டி வாழும் வேந்தனது புகழ் எங்கும் பரவு கின்றது. எங்குச்சென்ருலும் மக்கள் மன்னனது புகழ் பாடுகின்றனர். இதைக் கவிஞரும் அறிகின்ருர். ஒருநாள் கவிஞரும் அவருடைய மாளுக்கர் ஒருவரும் வெளியே உலாவச் செல்லுகின்றனர். அவர்கள் வீடு திரும்பும்போது சுமார் மணி ஏழு இருக்கும். அன்று முழுமதியநாள். வானத்தில் அது வனப்போடு ஒளிர்கின்றது ; வானமெங்கும் விண்மீன்கள் கண்ணைச் சிமிட்டிப் பார்ப்பனபோல் மின்னிக்கொண்டிருக்கின்றன. இருவரும் பல்வேறு செய்திகளைப் பற்றி உரையாடிக்கொண்டு வருகின்றனர். வானவன் புகழும் அவர்களது உரையாடலில் இடம் பெறுகின்றது. மானுக்கர் : கவிஞர் பெருமானே, கோதையின் ஆட்சியி லுள்ள கிலப்பரப்பு எத்துணை அளவு? கவிஞர் : அதுவா? அதற்கு அளவே இல்லை. இதோ பார், வானத்தை. அதன் அகற்சி எவ்வளவோ அவ்வளவு விரிவுடையது கோதையின் கிலப்பரப்பு.

  • வானிற்கு வையகம் வென்றது!’

மானுக்கர் : ஆகா, ബഖണല பெரிய நாடு : இந்தப் பெரிய காட்டை ஆளும் வேந்தனின் கீழ் எத்தனைக் குறுகிலமன்னர்கள் உள்ளனர் ? - . கவிஞர் தம்பி, வானத்தை உற்று நோக்குவாயாக வான வெளியில் எத்தனை விண்மீன்கள் மின்னுகின்றன ? விண்மீன்கள் எத்துணையோ அத்துணையர் சிற்றரசர்கள்.

  • வானத்து, மீனிற் கணையார் மறமன்னர். ”

மானுக்கர் : மிக கன்று, பெரியீர், அந்த வேந்தன் எத்தகை யவன் ?