பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

s 96] வெற்றிவேல் விழா சேரன எதிர்த்த பகைவர்கள் யாவரும் இறந்துபடுகின்றனர். சேரன் வெற்றிபெற்று வாகை சூடுகின்ருன். பகைவரை வென்று வெற்றிபெறுவதற்குத் துணையாக இருந்த வெற்றிவேலுக்கு விழா எடுக்கின்ருன். எத்தனையோ மன்னர்களைக் கொன்று சாய்த்த அந்த வேலைப் பகைவரின் மார்பிலிருந்து பறித்துக்கொண்டு வந்து பீலி அணிந்து மாலேசூட்டுகின்றனர் வீரர்கள். அதன் கைப்பிடியில் புனுகு கிறைந்த சந்தனத்தை அப்புகின்றனர். வேலின் ஒருபக்கத்தில் மரணத்தை முத்தமிட்ட மாற்ருரின் புலவு காறுகின்றது; அதன் மற்ருெரு பக்கத்தில் சந்தனத்தின் நறுமணம் வீசுகின்றது. ஒருபக்கம் செஞ்சாந்தின் மனங்கண்டு வண்டுகள் வட்டமிட்டுப் பண்ணிசைக்கின்றன; மற்ருெருபக்கம் புலால் காற்றம் வீசுவதைக் கண்டு குறுகரிகள் சூழ்ந்துகொண்டு ஊளையிடுகின்றன. வேலிற்கு விழா கடத்திய வீரர்கள் வேறு வினையின்பொருட்டு வேற்றிடஞ் சென்று திரும்பியபொழுது இக் காட்சியினைக் காண்கின்றனர் : மகிழ்கின்றனர். தங்களைத் தவிர வண்டினங்களும் கரியினங்களும் விழாவில் பங்கு பெறுவதைக் கண்டு கழிபெருங் களிப்பெய்துகின்றனர். இந்த நிகழ்ச்சியைக் காணும் படைஞன் ஒருவன் மற்ருெரு வனுக்குக் கூறும் பாணியில் பாட்டிசைக்கின்ருர் பாவலர். அப்பாடல் இது : அரும்பவிழ்தார்க் கோதை யரசெறிந்த வெள்வேல் பெரும்புலவுஞ் செஞ்சாந்தும் நாறிச்-சுரும்பொடு வண்டாடும் பக்கமு முண்டு குறுநரி கொண்டாடும் பக்கமு முண்டு. * (ன்ெ 13. புண்டாடு, T இது தொல் பொருள். புறத்தினயியல் 36-ஆம் நூற்பாவின் வான் மங்கலத் துக்கு ’ எடுத்துக்காம்.ாக ச்சிகுர்க்கினியரால் எடுத்தாளப்பெற்றுள்ளது.