பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/247

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[97. தாயர் - மகளிர் போராட்டம் tifலை நேரம். வண்டுகள் மொய்க்கும் வண்ணமலர் மாலேயைச் சூடிவரும் கோதை உலா வருகின்றன். அரண்மனை வாயிலிலிருந்து உலா புறப்படுகின்றது. அரசன் தாவிச்செல்லும் குதிரைகள் பூட்டிய தேரில் வீற்றிருக்கின்ருன் சேரன் உலா வருவதை எல்லோரும் நன்கு அறிவர். ஓர் இல்லத்தில் தாயும் பருவமடைந்த அவளுடைய மகளும் வசிக் கின்றனர். தன் மகள் சேரனக் கண்ணுற்ருல் அவளுக்குக் காதல் நோய் பற்றிவிடும் என்று அஞ்சுகின்ருள் அன்னே. ஆதலால் வாயிற்கதவை அடைத்து உட்கட்டிற்குச் செல்லுகின்ருள். அன்னை அந்தப்புறம் அகன்றதும் மகள் கதவைத் திறக்கின்ருள் பவனி வரும் பார்த்திபனைப் பார்க்கவேண்டுமென்று துடிக்கின்றது அவளது உள்ளம் , மன்னனை எதிர்நோக்கி கிற்கின்ருள். உள்ளே சென்றிருந்த அன்னை கதவு திறக்கும் ஒலியைக்கேட்டுத் திரும்பவும் வந்து கதவை அடைக்கின்ருள் ; பிறகு வீட்டினுள் சென்றுவிடுகின்ருள். மறுபடியும் கதவைத் திறந்துகொண்டு கிற்கின்ருள் மகள். இங்ங்ணம் கதவு பலமுறை மூடப்பெற்றும் திறக்கப்பெற்றும் அலேபடுகின்றது. இதளுல் கதவின் இருப்புக் குமிழ் ஆடுகின்றது; கதவின் குடுமியும் திறக்கத் திறக்கத் தேய்கின்றது. இப்படி ஒரு வீடா? பல வீடுகள். மன்னனைக் கண்டால் தம் மக்கள் மால்கொண்டுவிடுவர் என்று கதவுகளைத் தாழிட்டு அடைக் கின்றனர் தாயர், காவலனைக் கண்டு களிக்கவேண்டுமென்று கதவுகளைத் திறக்கின்றனர் காரிகையார். காதல் உள்ளத்திற்கும் காப்புள்ளத்திற்கும் இடையே நடைபெறும் போராட்டத்தில் கதவு இடைகின்று பெரும்பாடு படுகின்றது.