பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் கெருப்பு 怒蒙怒 தன் முன்னிலையில் கிற்பதாக ஒருவித பகற்கனவு காண்கின்ருள்; ஒருவித உருவெளித்தோற்றம் அவளது கண்ணுக்குத் தென்படு கின்றது. அதனே கோக்கி இவ்வாறு பேசுகின்ருள். நீரும் கிழலும் போலும் பிறர்க்குதவும் ஊரார்களே, என் குறைக்குச் சற்றுச் செவி சாயுங்கள். ஈரகெஞ்சமும், விருப்பு வெறுப்பற்ற கல்லுணர்ச்சியும் உங்கள் உடன்பிறந்த பண்புகள் அல்லவா? போர்க்களத்தைக் காண விருப்பங்கொள்ளும் மதயானே களையுடைய பூழியர்கோனின் பால் காதல் கொண்டேன். அந்தக் காதல் என் நெஞ்சகத்தில் கிடந்து தீயைப்போல் எரிக்கின்றது. அந்த நெருப்பின் வெம்மையைத் தாங்கிக்கொள்ளும் ஆற்றல் எனக்கு இல்லை. அருளுள்ளம் படைத்த நீங்கள்தான் அதனினின்றும் என்னைக் காத்தருளவேண்டும் ' என்கின்ருள். நங்கையின் மனகிலேக்குக் கவிஞர் தந்த பா வடிவம் இது : நீரு நிழலும்போ னீண்ட வருளுடைய ஊரிரே யென்னை புயக்கொண்மின்-போரிற் புகலுங் களியானப் பூழியர்கோக் கோதைக் கழலுமென் னெஞ்சங் கிடந்து. இது கைக்கிளை , தலைவி ஊரினர்க்கு உரைப்பது. விளக்கம் : நீரும் கிழலும் போல் நீண்ட அருளுடைய - நீர்போன்ற ஈர நெஞ்சினையும் கிழல்போன்ற தாராளமான அருளையும் உடைய உயக் கொண்மின் - யான் பிழைக்கும்படியாகக் காப்பாற்றுங்கள். போரிற் புகலுங் களியா? . போரில் பெரு விருப்பங்கொண்ட தைக்களிப்புள்ள யானே, புகலும் விரும்பும், பூழியர்கோக் கோதைக்கு பூழி நாட்டரசனை கோதை பின் காரணமாக. அழலும் என் கெஞ்சம் கிடந்து - காதல் நோயால் என் நெஞ்சு கதா கொதித்த வண்ணமுள்ளது. ஊரிசே, என்னே உயக்கொண்மின் என்றவாறு. அழலும் என் கெஞ்சம் கிடந்து ' என்ன இறுதியடியைத் திரும்பத் திரும்பப் பாடிப் படித்தால் தலைவியின் காதல் துடிப்பு ஒருவாறு நமக்கும் தட்டுப்படும். (13) {யா - வே) 3. கன லுமென்.