பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[103] திலே தகுமாறும் நெஞ்சு இ_லா வந்த சேரனப் பார்த்த சிலர் பார்க்காத பலரிடம் உலா வின் சிறப்பைப்பற்றிச் சிறப்பித்துப் பேசுகின்றனர். மார்பில் திகழ்ந்த மணிப்பூணப்புற்றியும், மார்பில் அங்குமிங்குமாக அசைந்தாடும் மலர் மாலைகளைப்பற்றியும் அவர்கள் பாராட்டிப் பேசுகின்றனர். இதைக் கேள்வியுறும் கங்கையொருத்தி சேரன ஒருநாள் பார்க்கவேண்டு மென்று அவாக்கொள்ளுகின்ருள். ஆய்மணிப் பைம்பூண் அலங்கு தார்க்கோதை என்ற உருவத்தை கினைந்த வண்ணம் இருக்கின்ருள் அவள். இங்கிலையில் சேரன் ஒருநாள் உலா வருகின்ருன். அவன் ஏறி வரும் குதிரை இந்தகங்கையின் வீடு வரையிலும் வந்து விடுகின்றது. உட்கட்டிலிருந்தவள் கொட்டு முழக்கத்தைக் கேட்டு வாயிற்படி வரையிலும் விரைந்து வருகின்ருள். ஆனல், அவளது நாணமோ அவளது கையைப் பிடித்துப் பின்புறமாக இழுக்கின்றது ; பார்க்கச் சென்றவள் உடனே கதவடைத்துத் திரும்பிவிடுகின்ருள். ஆளுல் மீண்டும் போவோமா, பேசாமல் இருந்துவிடுவோமா என்று மனம் ஊசலாடுகின்றது. பெருஞ் செல்வராக இருந்த ஒருவர் காலக்கோளாற்றில்ை எப் படியோ வறுமை நிலையை அடைந்து விடுகின்ருர். இவ்வாறு கல்குரவு நிலையை அடைந்தஅவர் ஒரு செல்வரிடத்தில் கடனுகவோ அல்லது இனமாகவோ கொஞ்சம் பொருள் பெறவேண்டுமென்று கினைத்துச் செல்லுங்கால், சற்றுத் துணிவோடேயே செல்லுவார். அவர் மாளி கையை அடைந்ததும் காணம் வந்து தடுத்துவிடும்; மீண்டும் வீட்டை நோக்கித் திரும்பி விடுவார். வறுமையோ பழையபடி போய் வரத்தூண்டும்; காணமோ அதைத் தடுத்து கிறுத்தும். இவ்வாறு