பக்கம்:முத்தொள்ளாயிர விளக்கம்.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

[104] வர்சலில் காத்துக்கிடக்கின்றதோ? இரவு கேரம். மாலையில் உலாவந்த சேரனே கினைந்து கினைந்து உருகிக்கொண்டிருக்கின்ருள் கங்கையொருத்தி. சேரனது மார்பில் கிடந்து கவ்விக்கொண்டிருந்த ஆய்மணிப் பைம்பூணே கினைந்து நைகின்ருள்; அங்குமிங்கும் ஆடிக்கொண்டு மார்பில் புரண்டுகொண் டிருந்த தளிரோடு ஒழுங்கு பெறத் தொடுக்கப்பெற்ற மலர் மாலையை எண்ணி எண்ணி ஏங்குகின்ருள். பகைவரைச் சீறுவதுபோல் ஒளிர் கின்ற வேல் அவளது உள்ளத்தை வருத்துகின்றது. 'ஆ இந்த ஆய் மணிப் பைம்பூணும் அலங்குதார்க் கோதையும் என்ன தவம் செய்த னவோ அவனது மார்பில் கிடந்து புரள என்று எண்ணுகின்ருள். அதுவோ மார்கழி மாதம்; கடும்பனி பெய்யும் காலம். வாடையோ எலும்புகளைத் துளைப்பதுபோல் வீசிக்கொண்டிருக் கின்றது. அவள் போர்வையை இழுத்துப் போர்த்திக் கொண்டு புரண்டு புரண்டு படுக்கின்ருள். உறக்கம் வந்தால்தானே ? காதல் நோய் அவளை வருத்துகின்றது. என்ன செய்வதென்று அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. அதே அறையில் மற்ருெரு பக்கத்தில் படுத் திருந்த தோழி, அவளது கிலேயைக் கண்டு, ஏன் உறக்கம் வரவில்லையோ !” என்று வினவுகின்ருள். அதற்கு இவ்வாறு மறு மொழி கூறுகின்ருள் அந்த கங்கை : 'தோழியே சேரனேக்காணும்பொருட்டு என் மனம் அவன்பால் சென்றுள்ளது. நேரமோ அதிகமாகிவிட்டது. போகும்போது ஒரு போர் வையைக்கூடக் கொடுக்க மறந்துவிட்டேன். பாவம், அது அவனைக் காணும் செவ்வி நோக்கி இந்தக் கடும்பனி இரவில் கையையே போர் வையாகக் கொண்டு அவனது பெரிய வாயிலில் காத்துக் கொண் டிருக்கின்றதோ ? அல்லது யாரவது அதனைத் தடுத்து நிறுத்தி யிருப்பார்களோ? ஒன்றுந் தெரியவில்லையே." என்கின்ருள்.

  • ஆடை யின்றி வாடையின் மெலிந்து

கையது கொண்டு மெய்யது பொத்திக் காலது கொண்டு மேலது தழிஇப் பேழையு ளிருக்கும் பாம்பென வுயிர்க்கும் ஏழை யானைக் கண்டன. மெனுமே. என்ற தத்திமுற்றப் புலவரின் 'நாராய் நாராய்' எனத்தொடங்கும் பாடற் பகுதியில் கையைப் போர்வையாகக் கொள்ளும் கில வருத்ல் காண்க.